மதுரை : 'தாமிரபரணி ஆற்றின் பெயரை 'பொருநை நதி' என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு 12 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி பொன்காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக 'பொருநை நதி' எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டது.
திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரியபுராணம் என பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே உள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். தாமிரபரணி என்பது வடமொழிச்சொல்; அதற்கு மாற்றாக தூய தமிழ் பெயரான பொருநை நதி என மாற்றம் செய்யக் கோரி தமிழக தலைமை செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. அப்போது 'மனுதாரர் கோரிக்கை முக்கியமானது' என குறிப்பிட்ட நீதிபதிகள், 'தாமிரபரணி என்பதை பொருநை நதி என மாற்றுவது குறித்து அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
வாசகர் கருத்து (20 + 17)
ஹிந்து மத கோவில்கள் இருக்க கூடாது , ஹிந்து மத சடங்குகள் கூடாது / குலதெய்வமாக வணங்குறதெல்லாம் கூடாது . .
நதி என்றாலும் வட மொழியா தான் இருக்கும். பொருநை ஆறு என்று ஏன் மாற்ற கூடாது.சமீபத்தில் பல வூர்களுக்கு நகர் என்று வைக்கிறார்கள் ..அதுவும் வட மொழி தான். தமிழ் தமிழ் என்றில்லை ... அவர் பெயரை கருணாநிதி என்ற வட மொழியிலையே மாற்றி கொண்டார். தாமிரபரணி பழக்கப்பட்டு போன பெயர் . அதை ஏன் மாற்றவேண்டும்? இந்திய மொழிகளெல்லாம் வட மொழியே...இணைந்ததும் தான். வள்ளுவனே முதல் குரலில் ஆதி பகவன் என்று சொன்னான். ..
அது இடைச்செருகலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
தமிழ் கிடையாது அதையும் மாற்றவேண்டும் என வழக்கு தொடர்வீர்களா?
சிலைக்கு அடுத்துபபெயர்மாற்றத் தொழில் நடக்கிறது பெயர் மாற்றினால் மண் அள்ளுதலும்.....
தாமிரபரணி நதி பெயரை மாற்றக்கோரி வழக்கு (17)
தேவையில்லாம கோர்ட்டு நேரத்தையும் வீணாக்கி...
அரசு இதை அனுமதிக்க கூடாது ....
இது வெறும் வெட்டி வேலை ,வெண்ண வெட்டி சிப்பாய்ங்க ஜி.எஸ்.ராஜன் சென்னை .
ஊர் பெயரை மாற்றுவார்கள் தெரு பெயரை மாற்றுவார்கள் அடுத்தவர்கள் பெயரை மாற்றுவார்கள் நதியின் பெயரை மாற்றுவார்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றுவார்கள். ஆனால் முதல்வர் பெயர் மட்டும் அந்நிய நாட்டு ஏகாதிபத்தியனின் பெயரில்தான் இருக்கும் மாற்றவே மாட்டார் - மாட்டார்கள் இதுதான் திராவிட மாடல்.
பெயர் ஏதுவாயிருந்தால் என்ன (திராவிட மாடல் மண்ணய் அள்ளி பிடித்த சேச்சி நாட்டிற்கு அனுப்பாமல் ) மணல்லை அள்ளி ஆற்றை குப்பை மேடாக செய்யாமல் இருந்தால் சரி.
நெல்லை மாவட்டக்காரர்களிடம் கருத்து கணிப்பு நடத்துங்கள். தாமிரபரணி அவர்களின் சொத்து. சென்னையிலும் கோர்ட்டிலும் அமர்ந்திருக்கும் சம்பந்தமற்றவர்களுக்கு நெல்லைகாரர்களின் வாழ்வோடு இணைந்த ஜீவ நதியின் வரலாறும் தெரியாது அவர்களின் உணர்வுகளும் தெரியாது.
தாமிரபரணி ஆற்றில் தாமிரம் இருப்பதாலும் தாமிரபரணி என அழைக்கப்படுகிறது.
Coimbatore Karunya area old name change pana oru order podunga ejaman
விவசத்தை இல்லாத வீணர்களின் கூட்டம்
கிறித்தவ கைக்கூலிகளின் அடுத்த முயற்சி. நெடிய பாரம்பரியம் கொண்ட அகண்ட பாரதத்தை பல வழிகளிலும் உடைக்கும் முயற்சி. இன்று பெயரை மாற்றுவதால் இலக்கியங்கள் பொய்யாகி விடுமா? மவுண்ட் ரோடு மக்கள் பயன்பாட்டில் இன்றும் மவுண்ட் ரோடு தான். பூந்தமல்லி நெடுஞ்சாலை இன்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை தான். த்ராவிஷம் பரிதாபமாகத் தோற்கிறது.
வர வர கோர்ட்களுக்கு எதை அனுமதிக்கலாம் எதை அனுமதிக்க கூடாது என்ற விவஸ்தையே இல்லை. நதிகளின் பெயரை மாற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. மேலும் இது தான் தலை போகிற விஷயமா உடனே அனுமதிக்க. பொருநை என்ற பெயரும் வழக்கில் உள்ளது தான். அதாவது தொன்று தொட்டு வரும் பெயரை ஒழித்துவிட துடிக்கும் ஒரு கும்பல், அதற்கு துணை போகும் கோர்ட். இது தான் தமிழகத்தின் நிலைமை இன்று.
நீதி மன்றங்களுக்கு எந்த வழக்குகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு புரிதல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வழக்கு போட் அனுமதித்தால் தீர்வு காண வேண்டிய வழக்கு தாமதமும் குறையாது
Our court also immediately take up such cases leaving lakhs of pending cases for more than 10 to 20 years
அப்புறம், அமராவதிக்கு 'ஆன் பொருநை ' பவானிக்கு 'பூவாணி' ,கூவத்துக்கு 'பழம் பாலாறு ' என்று தேடிப்பிடித்து மாற்றிவிடலாம் இல்லையா ...[இவையும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு , அந்தந்த நதிகளின் பெயராக வழங்கப்படுபவையே ]
இதில் கோர்ட் தலையிட அதிகாரமுள்ளதா
ithil kort th
அந்த ஆறு என்னடா பாவம் பண்ணிச்சு, அத பேர மாத்தி, தண்ணி தான் கரைபுரண்டு ஓட போகுதா, இல்ல......
இதெல்லாம் தேவையா?