ADVERTISEMENT
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மன்னார் வளைகுடாவில் வலையில் சிக்கிய இரண்டு டால்பின்களை மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கடலுக்குள் விட்டனர்.
இக்கடலில் மீனவர்கள் கரைவலை தொழிலில் ஈடுபடுகின்றனர்.
நேற்று முன்தினம் வலை இழுத்த போது 4 மற்றும் 6 வயது அரிய வகை டால்பின்கள் சிக்கி உயிருக்கு போராடின. டால்பின்களை மீட்டு மீனவர்கள் கடலுக்குள் சென்று விட்டனர்.
கீழக்கரை வனச்சரகர் செந்தில்குமார் கூறியதாவது:
மன்னார் வளைகுடா கடல் பகுதி டால்பின்களின் வசிப்பிடமாக உள்ளது. அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின்களை பாதுகாப்பது மீனவர்களின் கடமை. இது போன்ற நிகழ்விற்காக சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!