ADVERTISEMENT
புதுடில்லி:'ஏர் இந்தியா' நிறுவனம், புதிய 'பிராண்டிங்' முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவின் சின்னமாக 'மகாராஜா' சின்னம் உள்ளது. கடந்த 76 ஆண்டுகளாக இச்சின்னம் மாற்றப்படாமல் உள்ளது.
தற்போது, ஏர் இந்தியா நிறுவனம் 'டாடா சன்ஸ்' வசம் வந்துவிட்ட நிலையில், அதன் சின்னத்தை மாற்றியமைக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா, அதன் புதிய பிராண்டிங் முயற்சிக்காக, பிரிட்டனைச் சேர்ந்த பிராண்டு மற்றும் வடிவமைப்பு ஆலோசனை நிறுவனமான 'பியூச்சர் பிராண்ட்ஸ்' நிறுவனத்திடம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிறுவனம், 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் அடையாளத்தை மாற்றி அமைத்துஉள்ளது.
டாடா சன்ஸ் இந்த முயற்சியில் இறங்கி உள்ளதை அடுத்து, தற்போதைய சின்னமான மகாராஜா சின்னம் தொடருமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இதற்கிடையே, ஏர் இந்தியா நிறுவனம், அதன் விளம்பரம் உள்ளிட்ட பிரசார வெளியீடுகளில், மகாராஜா சின்னத்தை தற்போது உபயோகிப்பதில்லை.
ஏர் இந்தியாவுடன் 'விஸ்டாரா' நிறுவனத்தை இணைக்க உள்ள நிலையில், உலகளாவிய நுகர்வோரை ஈர்க்கும் வகையில், மகாராஜாவுக்கு பதிலாக புதுமையான சின்னம் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மகாராஜா எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ஏர் இந்தியாவும் காணாமல் போக இருக்க மகாராஜா சின்னத்தை டாடா நிறுவனம் மாற்றுவதுதான் சரி.