போபால்: ம.பி.,யில் நடந்த திருமணம் ஒன்றில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பாடு சாப்பிட்ட எம்.பி.ஏ., பட்டதாரியை பிடித்த, உறவினர்கள் அவரை அடித்து உதைத்து பாத்திரம் கழுவ வைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை.
திருமண நிகழ்ச்சிகளில் மணமகன் மற்றும் மணமகள் தரப்பினரை தவிர்த்து அடையாளம் தெரியாத நபர்களும் உறவினர்கள் போல் நடித்து சாப்பிட்டு செல்வது வழக்கம். அதனை திருமண ஏற்பாட்டாளர்கள் கண்டுபிடித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலர் விசாரித்து விடுவதும், இன்னும் சிலர் எச்சரித்து விட்டு விடுவர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் போபாலில் விடுதியில் தங்கி எம்.பி.ஏ., படிக்கும் ஜபல்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழையா விருந்தாளியாக சென்று உணவு சாப்பிட்டுள்ளார்.
இதனை, கண்டுபிடித்த உறவினர்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து சராமரியாக தாக்கினர். பிறகு, அவருக்கு தண்டனையாக பாத்திரம் கழுவ வைத்துள்ளனர். எம்.பி.ஏ., படிக்கும் உனக்கு பெற்றோர் பணம் அனுப்ப மாட்டார்களா என கேள்வி எழுப்பி தாக்கினர். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவு செய்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த பலரும், இதனை மனிதநேயமற்ற செயல் எனக்கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (36)
உழைச்சு சாப்புடணும். எம்.பி.ஏ படிச்சுட்டு பாத்திரம் கழுவி சாதனை
இந்தியாவில் எம்.பி.ஏ படித்த பட்டதாரிக்கு இந்த நிலைமையா ???அய்யகோ ஒரு புறம் பசிக்கொடுமை மற்றொரு புறம் வேலை இல்லை ,இந்தியா எங்கே செல்கிறது மோடிஜி ???,படித்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு மற்றும் நிரந்தர வருமானமும் இல்லை.இன்னும் என்ன என்ன அவலம் வரப் போகுதோ தெரியல . ஓசி சோறு தின்று தர்மஅடி வாங்கிய பட்டதாரியின் நிலைமை யாருக்கும் இனி வரக்கூடாது .எல்லாம் அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
சின்ன பைய்யன்..பாவம் ...அடித்திருக்க வேண்டாம்
அதான் பக்கோட போட்டு பிழைச்சுக்கோன்ன்னு நம்ம பாரதப் பிரதமரே சொல்லிட்டாரே..அதிருக்கட்டு ம்கல்யாண வீடுகளில் நிறைய வெளியார்கள் சாப்பிடுவதை பார்க்கிறோம். வருபவர், பெண் வீட்டடார் அழைப்பில் வந்தவரா, மப்பிள்ளை வீட்டார் அழைப்பில் வந்தவரான்னு யாராவது செக் பண்ணுவ்வாங்களா. யாராய்யாவது கேட்கப் போய் பெரி தகராறு நடக்குமே. இருந்தாலும் ஒரு இலை சாப்பாட்டுக்கு அந்த பட்டதாரியை அடித்தது பெரிய தப்பு. என்ன கஷ்டமோ?
அது என்னநா நடுநிலை....வேலை வாய்ப்பு ஏற்படித்திருக்கீங்கள்ல அதுல.