Load Image
Advertisement

6ம் வகுப்பில் ரம்மி விளையாட்டு பற்றிய பாடம்: நீக்க பள்ளிகல்வித் துறை முடிவு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: பலரின் உயிரிழப்பிற்கு காரணமான ரம்மி விளையாட்டு குறித்த பாடம், 6ம் வகுப்புக்கான மூன்றாம் பருவபாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலத்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அதனை நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலர் பணத்தை இழப்பதுடன், இதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதனால் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.

இதை தடுக்கும் வகையில், ரம்மி விளையாட்டிற்கு நிரந்தரமாக தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றிய தமிழக அரசு அதனை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
Latest Tamil News
Latest Tamil News
இச்சூழ்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட 6 ம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான கணித பாடத்தில் ரம்மி விளையாடுவது பற்றிய பாடப்பகுதி இடம்பெற்றுள்ளது. பலர் உயிரிழப்பிற்கு காரணமான ரம்மி விளையாட்டு பற்றிய குறிப்புகள் குழந்தைகள் படிக்கும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை உடனடியாக நீக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

Latest Tamil News
இதனை தொடர்ந்து, அந்த பாடப்பகுதியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம்பெற்றுள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுமையாக நீக்கப்படும் என கூறியுள்ளனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (49)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    ப.கல்வித் துறை உடலுறுப்புக்களுக்கு சுறுசுறுப்பைத் தரும் விளையாட்டுக்களை அல்லவா ஊக்குவிக்க வேண்டும்

  • Raja Sekar -

    0

  • தேவதாஸ் புனே -

    சீட்டு விளையாடுவது அன்று முதல் இன்று வரை தவறான செயல் பல குடும்பங்களை பாழ்படுத்தி உள்ளது......

  • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

    லியான் பாட நால் தலைவர். இந்த ஆண்டு ரம்மி. அடுத்த ஆண்டு பெண்கள் இடுப்பு பற்றி பாடம்

  • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

    கவர்னர் கையெழுத்து போடாததால் அவரை இழிவுபடுத்தி ரசித்த கூட்டங்கள் எல்லாம் எங்கே போனீர்கள் நல்லவேளை சுரண்டல் லாட்டரி என்று ஒன்று இருந்தது அது இப்போது இல்லை இல்லையென்றால் அதையும் பாடபுத்தகத்தில் சேர்த்து இருப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement