Load Image
Advertisement

உதயநிதி புகழ் பாட அரசு பள்ளி மாணவர்கள்!

Tamil News
ADVERTISEMENT
''அமைச்சர் ஆகிறதுக்கு முன்னாடியே, அவர் கீழ பணியாற்ற அதிகாரிகள் மத்தியில போட்டி நடக்கு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''யாரு... உதயநிதியையா சொல்றேள்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ஆமாம்... கட்சியில பல மூத்த தலைவர்கள் இருக்கையில, உதயநிதிக்கு அமைச்சர் பதவி குடுக்க முதல்வர் தயங்குதாரு வே... ஆனா, பல தரப்புல இருந்தும் நெருக்கடி வருதுல்லா... அதனால, சீக்கிரமே அமைச்சர், 'சீட்'டுல உதயநிதி உட்கார்ந்துடுவாருன்னு சொல்லுதாவ வே...

''அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும்னு, கோட்டையில இப்பவே பட்டிமன்றம் நடக்கு... அதுக்குள்ள உதயநிதியின் கீழ் செயலரா பணியாற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான், நீன்னு போட்டி போடுதாவ வே... 'முதல்வர் மகனுடன் நெருக்கமானா, அதிகாரத்துடன் வலம் வரலாம்'கிற நினைப்பு தான் இதுக்கு காரணம்...'' என்றார், அண்ணாச்சி.
Latest Tamil News
''நானும் உதயநிதி சம்பந்தமா ஒரு சங்கதி சொல்றேங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''உதயநிதிக்கு சமீபத்துல பிறந்த நாள் வந்துச்சே... இதுக்காக, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை, கடைத் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள்ல தி.மு.க.,காரங்க வாழ்த்து போஸ்டர் ஒட்டினாங்க...

''அரசு பள்ளி மாணவர்களை வச்சு, இந்த போஸ்டர் ஒட்டுற வேலைய செஞ்சிருக்காங்க... இதை பார்த்த பொதுமக்களுக்கு பயங்கர அதிர்ச்சி... 'பள்ளி மாணவர்களை போஸ்டர் ஒட்ட பயன்படுத்திய, தி.மு.க., நிர்வாகிகள் மீது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்துல நடவடிக்கை எடுக்கணும்'னு சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி துாக்கிட்டாங்க...

''அது மட்டும் இல்லைங்க... அன்னைக்கு நடந்த பிறந்த நாள் பொதுக் கூட்டத்துல, பள்ளி மாணவ - மாணவியரை மேடை ஏத்தி, உதயநிதியை புகழ்ந்து பாட்டு பாட வச்சிருக்காங்க... 'உதயநிதியின் நண்பரான கல்வி அமைச்சர் மகேஷ், அரசு பள்ளியை உதயநிதி ரசிகர் மன்றமா மாத்துறாரா'ன்னு சமூக வலைதளங்கள்ல பலரும் கொந்தளிச்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அண்ணாச்சி சிரிக்க, பெஞ்ச் கலைந்தது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (16)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அது சரி ,உதயநிதியிடம் இருந்து நிதி ஏதாவது கிடைச்சுதா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • Suppan - Mumbai,இந்தியா

  இந்த உதயண்ணா அமைச்சரானால் நடிக்க முடியாதே ஓ அந்த ஒழுங்கெல்லாம் திமுகவுக்கு கிடையாதோ

 • sankar - சென்னை,இந்தியா

  அம்மாஜியின் ஆட்சிக்காலத்தில டாஸ்மாக் ட்ரிங்க் ஷாப் தவிர மத்ததுக்கெல்லாம் அம்மா, அம்மா, அம்மா, நீயில்லாத இடமேய்ல்லைன்னு எல்லாத்துக்கும் அருமை அம்மாவின் பேர் வாசாங்களே. ஏனாம்?

 • sankar - சென்னை,இந்தியா

  அம்மா, எங்கள் அம்மா வாழ்கவே அருமை அம்மா வாழ்கவே.-ன்னு அதிமுக ஆட்சிக் காலத்தில ஸ்கூல் பசங்க பாடினதா கேள்வி.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Nidhi kidaichuthaa ???.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement