ADVERTISEMENT
ஆரம்பத்தில் கவுன்சிலர்கள் 'லஞ்சம், கமிஷனா... அப்படி என்றால் என்ன' என கேட்காத குறையாக பச்சை குழந்தைகள் போல் முகமூடி அணிந்து வலம் வந்தனர்.
தற்போது அதை கழட்டி வீசிய சில கவுன்சிலர்கள் எப்போது, எங்கு, யாரிடம் லஞ்சம், கமிஷன் வாங்கலாம் என தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்சத்துமாவு கடத்தல், வார்டுக்குள் வீடு கட்டியவரிடம் 'கட்டிங்' கேட்டு மிரட்டல் என களமிறங்கினர்.
'இது போன்று சர்ச்சைகளில் சிக்காதீர்கள்' என கட்சி நிர்வாகிகள் அறிவுரைகூறினர். ஆனால் கவுன்சிலர்கள் கேட்பதாக இல்லை. ஒரு படி மேலே சென்று பில் கலெக்டர்களை மிரட்டி வரி வசூல் பணத்தில் பங்கு கேட்க துவங்கி விட்டனர். இதனால் வேலையே வேண்டாம் என தெறித்து ஓட தயாராகி விட்டனர் பில் கலெக்டர்கள்.
இந்நிலையில் கவுன்சிலர் நாகநாதன் 'இன்றும், என்றும் உண்மையாக நேர்மையாக செயல்படுவேன். என் வார்டுக்குள் யாராவது என் பெயரை கூறி கட்டட அனுமதி, புதிய, காலி மனைக்கு வரி விதிப்பு, புதிய பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு, சீரமைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவை, பணிகளுக்கு லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர். வற்புறுத்தினால் லஞ்ச ஒழிப்புத் துறை, போலீசில் புகார் அளிக்கலாம் அல்லது உடனே என்னை தொடர்பு கொள்ளலாம்' என அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் லஞ்சமின்றி மக்கள் பணிகள் நடக்க வேண்டும் என்பதற்காக இதை தெரிவித்துள்ளேன். என் பெயரை சொல்லி லஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்து போலீசில் புகார் செய்யவும் நான் தயங்க மாட்டேன்'' என்றார்.
இவர் போல் பிற கவுன்சிலர்களும் லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். லஞ்சம், ஊழலால் காலதாமதமாகும் முக்கிய பணிகளை விரைந்து முடிக்க எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏதோ சொல்லவாவது செஞ்சி இருகார் அதுக்கு ஒரு சபாஷ் போடலாம்....