Load Image
Advertisement

‛‛வரும் ஓராண்டில் 200 ஜி20 கூட்டங்கள் நடைபெறும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்புதுடில்லி: வரும் ஓராண்டில் 200 ஜி 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Latest Tamil News


உலகில் பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த 20 நாடுகளில் கூட்டமைப்பான ஜி 20ன் தலைமைப்பொறுப்பை இந்தியா இன்று(டிச.,01) முறைப்படி ஏற்றுள்ளது. இதனை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் , கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், ஜி20-ன் இந்திய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பே சியவதாவது: "ஜி-20 தலைமையை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இதன்மூலம், இந்தியாவின் தகவல்களை மற்ற நாடுகளோடு பகிர்ந்துகொள்ள முடியும். உலகில் தெற்கின் குரலாக நாம் மாறுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. முக்கியமான இந்த தருணத்தில் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

குறிப்பாக தங்களின் சிறப்பான செயல்பாடுகளின் மூலம், இங்கு மாற்றத்தை நிழ்த்தியவர்கள் குறித்த தகவல்களை நாம் பகிர முடியும். உலகம் சவாலான காலகட்டத்தில் இருக்கும்போது, நாம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளோம். அந்த வகையில் இது நமக்கும் ஒரு சவால்தான். ஜி-20 தலைமையை ஏற்றிருப்பது மிக பெரிய வாய்ப்பு.

வரும் ஓராண்டில் 200 ஜி 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்கள் புதுடெல்லியை மையப்படுத்தியதாக இருக்காது. நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். கொரோனா தொற்றால் உலகம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை மட்டும் பேசுவதாக இல்லாமல், பிரச்சனைகளை முன்வைப்பதாக அமையும்.

Latest Tamil News

செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த கூடிய உலகில், 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், இந்தியாவின் மதிப்பை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. இது 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலை. பிறருடன் நெருங்கி உறவு அதிகாரிப்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (5)

 • Indhuindian - Chennai,இந்தியா

  கஷக கண்மணிகளுக்கு கருப்பு சட்டை காரர்களும் நல்ல புரிஞ்சிக்கோங்க தேவையான அவகாசம் குடுத்துட்டோம் இது மோடி அவர்களால் நடத்தப்படும் நிகஷ்சி தேவையான அளவுக்கு கருப்பு கொடி கோ பேக் மோடி பன்னேர்கள் கருப்பு பாலூணலாம் தயார் பண்ணிடுங்க இப்பவே ஆர்டர் பண்ணிடுங்க

 • g.s,rajan - chennai ,இந்தியா

  வருஷத்துக்கு கூட்டம் வெறும் இருநூறுதானா, இதுல என்ன கஞ்சத்தனம் வேண்டிக்கிடக்கு, முன்னூத்தி அறுபது அஞ்சு கூட்டம் போடுங்க, அதாவது வருடம் முழுதும் தினம் ஒரு கூட்டம் போடுங்க, அப்புறம் நாட்டு மக்களுக்கு நித்தம் சாப்பாட்டையும் அப்படியே ஏற்பாடு செஞ்சு நல்லா கவனிச்சிருங்க, உங்களுக்கு ரொம்ப ரொம்ப புண்ணியமாய்ப் போகும் ..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ஹூம் ,இவர் அடுத்த "வாயால வடை"

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  செலவைப் பத்தி பேசவே மாட்டாங்க.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அப்பாடா ,இனி நம் நாட்டு மக்களுக்கு மூணுவேளையும் வயிறு நிறைஞ்சுடும் ,சுத்தமா பசி எடுக்காது .எந்தக் கவலையும் இன்றி ,நிம்மதியாய் படுத்துத் தூங்கலாம்..சூப்பர் .... ஜி.எஸ்.ராஜன் சென்னை .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement