ADVERTISEMENT
புதுடில்லி: நவ., மாத ஜிஎஸ்டி ரூ.1,45,867 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நவ., மாதம் ஜிஎஸ்டி ரூ.1,45,867 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு நவ., மாதத்தை காட்டிலும் 11 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது ரூ. 1.31,526 கோடி வசூலாகி இருந்தது. இந்த ஆண்டு தொடர்ந்து ஒன்பது மாதங்களாக ஜிஎஸ்டி வசூலானது ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.

கடந்த ஆண்டு நவ., மாதத்தை காட்டிலும் தற்போது இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் 20 சதவீதம் அதிகம். இறக்குமதி சேவைகள் உள்பட உள்நாட்டு பணப்பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானமும் 8 சதவீதம் அதிகம்.
நவ., மாத வசூலான ரூ.1,45,867 கோடியில் சிஜிஎஸ்டி-25,681 கோடி
எஸ்ஜிஎஸ்டி -ரூ.32,651 கோடி.
ஐஜிஎஸ்டி-ரூ.77,103 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.38,635 கோடி அடங்கும்)
செஸ்-ரூ10,433 கோடி(பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.817 கோடி அடங்கும்)
இழப்பீடுக்கு பிறகு, கடந்த நவ., மாதம் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைத்த வருமானம் சிஜிஎஸ்டி ரூ.59,678 கோடி.
எஸ்ஜிஎஸ்டி- ரூ.61,189 கோடி.
கடந்த நவ., மாதம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ. 17 ஆயிரம் கோடி விடுவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (4)
இதிலென்ன பெருமை .எல்லா வரியையும் ஏற்றிவிட்டு புதிதாக வரி போடா ஒன்றுமில்லை.டாய்லேட் போக வரி தவிர
உக்ரைன் ரஷ்ய போருக்கு பின்னான பொருளாதாரப் பிரச்சினைகளால் மேற்க்கத்திய, சீன நாடுகளில் பொருளாதாரமும் வரி வருமானமும் பெருமளவு சரிந்து விட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆக்டோபஸ் போல ரத்தத்தை மக்களிடம் அரசாங்கமே உறிஞ்சி எடுக்குது ,என்னத்த சொல்ல . ஜி.எஸ்.ராஜன் சென்னை .