Load Image
Advertisement

‛‛திமுகவினர் தலைகுனிய வேண்டும்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை


சென்னை: திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி, கவர்னர் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் தலை குனிய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Latest Tamil News


தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று(டிச.,01) கவர்னர் ரவியை சந்தித்தார். இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு கூறியுள்ளோம். கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டும் என கோரினோம்.

ஆன்லைன் தடை மசோதா பரிசோதனையில் இருப்பதாக கவர்னர் ரவி தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் ரவி உறுதி அளித்துள்ளார். மசோதா குறித்து சில சந்தேகங்கள் உள்ளது. அதனை தெளிவுப்படுத்திக் கொண்டு, ஓப்புதல் தருவதாக கூறினார்.

இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.


‛‛ திமுகவினர் தலை குனிய வேண்டும்:''





Latest Tamil News

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜ., முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி, கவர்னர் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் தலை குனிய வேண்டும்.

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (39)

  • Ramamurthy N - Chennai,இந்தியா

    திரு அண்ணாமலை, ஏன் நீங்கள் மத்திய அரசிடம் கூறி நாடு முழுவதும் தடை செய்ய முயற்சி எடுக்கவில்லை? எதற்கெடுத்தாலும் ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் மத்திய அரசு இதற்கும் முயற்சி செய்யுங்கள். தப்பி தவறி காங்கிரஸ் மத்தியில் பதவி வகித்து உங்கள் அரசாங்கங்களுக்கு இதே மாதிரி கவர்னர்களை வைத்து குடைசல் செய்து விடப்போகிறார்கள். தற்போதைக்கு சான்ஸ் இல்லை இருந்தாலும் கவனம் தேவைதானே?

  • TRUBOAT - Chennai,இந்தியா

    மூடர் கூட்டம். தினம் ஒரு அறிக்கை....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஒரு வேளை தலை கனமா இருக்கும் ,இல்லை தலைக்கனமாகவும் இருக்கும் .

  • Nallashami - Coimbatore,இந்தியா

    தலைகுனிவதா? யாருகிட்ட.. அதெல்லாம் வெட்கம், மானம், ரோஷம் உள்ளவங்கிட்ட போய் சொல்லுங்க... நாங்கள்ளாம் யாரு? ஆனானப்பட்ட காமராஜரையே பொய் பிரச்சாரத்தால கவுத்தவங்க... போங்க. போய் வேறவேலைய பாருங்க.. வந்துட்டாரு நமக்கு புத்திமதி சொல்லி நேரத்த வீணாக்கிட்டு...😁

  • sankar - சென்னை,இந்தியா

    அண்ணாமல, நீ செய்ற தப்புக்கேல்லாம் தலை குனிய வேண்டிய நேரம் விரைவில் வரும்.

    • Vaanambaadi - Koodaloor,இந்தியா

      சரி.. அழுவாத.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement