ஒரே நாடு, ஒரே மின் கட்டணம் கொள்கைக்காக களமிறங்குகிறார்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பீகாரில் ரூ.15,871 கோடி மதிப்பிலான மின் துறை திட்டங்களை முதல்வர் நிதிஷ் குமார் இன்று(டிச.,01) வெளியிட்டார். இதையடுத்து அவர் பேசியதாவது: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பீகார் அதிக விலையில் மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறுகிறது.
2005ல் பீகார் மாநிலத்தில் மின் நுகர்வு வெறும் 700 மெகாவாட்டாக இருந்தது. தற்போது, 6,738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பை அரசாங்கம் உறுதி செய்தது.

மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு பீகார் மின்சாரம் பெறுகிறது என்றும் அதனால்தான் நாங்கள் அதிக நுகர்வோருக்கு அதிக கட்டணத்தை விதிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் நாடு முழுவதும் ஒரே விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே மின் கட்டணம் என்ற கொள்கையை ஏற்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே சீரான மின் விகிதம் இருக்க வேண்டும் என்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் மின் நுகர்வோருக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (9)
ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது, ஆனால் தமிழகத்துக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை. இது எப்படி இருக்கு... ???
ராசா.. இதற்கு பலமுறை பதில் சொல்லியாகிவிட்டது. தமிழகத்தை விட மஹாராஷ்டிரா அதிக சாதனை புரிந்துள்ளது என்பது தெரியுமா? இரண்டுமே பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் நிற்கின்றன. அவைகளை மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் வாங்குவதால்தானே ஜி எஸ் டி வசூல் அதிகம் கிடைக்கிறது. விவசாயத்து முக்கியம் கொடுக்கும் மாநிலங்கள் ஜி எஸ் டி வசூலில் பின்தங்கித்தான் உள்ளன. அவைகள் விவசாயத்தைக் குறைத்து மற்ற பொருட்களை உற்பத்தி செய்யச் சொல்லலாமா? தமிழகத்திலேயே கோவைதான் ஜி எஸ் டி வசூலில் முன்னனுள்ளது. அதனால் அதற்கு என்ன பயன்? ஆகவே இந்த மாதிரியான திமுகக்காரன் மாதிரி கருத்து தெரிவிக்காதீர்கள்.
அடிப்படை தொழில்நுட்ப ஞானம் இல்லாத அரசியல் வியாதிகளால் எப்போதுமே இந்தியாவுக்கு தலை வலி தான்
தேசிய மின் சந்தை மூலம் குறைந்த விலையில் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க உங்களுக்கு எது தடையாக உள்ளது?
வளர்ந்த மாநிலங்களின் பயன்களை அறுவடை செய்வதற்கே, அதிகம் பாதிக்கப்பட போவது வளர்ந்த நம் மாநிலம்மே
ஒரே நாடு ஒரே மின் கட்டணம் மற்றும் வேண்டும் ஆனால் ஒரே நாடு ஒரே பொது சிவில் சட்டம் மட்டும் வேண்டாம்