Load Image
Advertisement

மும்பையில் தென் கொரிய பெண் மானபங்கம்: 2 பேர் கைது

Tamil News
ADVERTISEMENT

மும்பை: மும்பையில் சாலையில் நேரலை செய்து கொண்டிருந்த தென் கொரியாவை சேர்ந்த பிரபல யுடியூபரை மானபங்கம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென் கொரியாவை சேர்ந்த பிரபல யுடியூபர் மையோசி இன் என்பவர் நேற்று (நவ.,30) இரவு மும்பை புறநகர் பகுதியான 'கர்' என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடைமறித்த இளைஞர் ஒருவர் கையை பிடித்து இழுத்து சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'நோ நோ' எனக்கூறிய மையோசி இன்-ஐ மீண்டும் நெருங்கி வந்த அந்த இளைஞர் முத்தம் கொடுக்க முயன்றார்.

அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் நடந்து செல்லும் போது, மற்றொரு இளைஞருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும், வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்து மையோசி இன் நடந்து சென்றார். இது அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகியது.
Latest Tamil News

இது தொடர்பாக மையோசி இன் வெளியிட்ட அறிக்கையில்,'' நேற்று இரவு நேரடியாக ஒளிபரப்பு செய்த போது, ஒருவர் என்னை துன்புறுத்தினார். அவர், நண்பருடன் இருந்ததால், பிரச்னையை பெரிதாகாமல் இருக்க முயற்சித்ததுடன் அங்கிருந்து வெளியேற முயன்றேன். அவர்களுடன் நெருங்கி பழகி, பேசியதால் தான் இப்படி நடந்ததாக சிலர் கூறுகின்றனர்'' எனக்கூறியுள்ளார்.

Latest Tamil News
இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தாமாக முன்வந்து, ''பாலியல் துன்புறுத்தல்'' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து (33)

  • s. mohan -

    இந்திய நாட்டின் மானத்தை கெடுக்கின்ற இந்த மாதிரியான கீழ்த்தரமான காரியங்கள் செய்வோரை சட்டத்தை கடுமையாக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் அவர்களுக்கு சவுக்கு அடி கொடுக்க vendum. அப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அது பாடமாக அமையும்.

  • PalaniKuppuswamy - sanjose,இந்தியா

    நாட்டின் விருந்தினர் வெளிநாட்டு பிரஜைகள். மிகவும் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டியவர்கள். நமது நாட்டை பற்றி மிகவும் கேவலமாக எண்ணம் இத்தகைய செயல்களால் பரவும். இந்த கொடியவர்களை நாட்டின் நற்பெயரை கெடுக்கும் கயவர்களை, நாட்டில் வாழ தகுதி இல்லாமல் ஆகவேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அஞ்சுவர். குடியுரிமை நீக்கி தேச துரோக வழக்கு போட்டு நாடு கடத்த வேண்டும்

  • Eswaran - TAMILNADU,இந்தியா

    As per reports: After establishing the identity of the two accused, the police nabbed the duo," said a police officer... The arrested suspects have been identified as Mobeen Shaikh (19) and Naqeeb Ansari (21).

  • Eswaran - TAMILNADU,இந்தியா

    இந்த அயோக்கிய பயலுக பெயர் : மொபீன் மற்றும் முஹம்மது.... நாட்டின் பெயரை கெடுக்கவே இப்படி பன்றானுங்க..

  • Kumari Thamilan - Nagercoil,இந்தியா

    நடந்தது பாலியல் தொல்லை தான். மானபங்கமல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்