ADVERTISEMENT
விழுப்புரம்-விழுப்புரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நேற்று நடைபெற்ற மாணவிகளுக்கான தடகள போட்டியை கலெக்டர் மோகன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட அளவிலான 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியர்களுக்காக தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மாணவிகள் அனைவரும் போட்டிகளில் பங்கேற்று தங்கள் ஆரோக்கியம் மற்றும் மனநிலையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
முதல்வர் 'நான் முதல்வன்” என்ற திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டம், தாங்கள் மேற்கொள்ளும் செயல்களில் நான் முதலிடம் பெற வேண்டும் எண்ணத்தினை உருவாக்க வேண்டும் என்பதாகும். எனவே மாணவர்கள் படிப்பு, விளையாட்டிலும் முதலிடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, 37-வது சப் ஜீனியர் மகளிர் பிரிவில் பீகாரில் நடைபெறும் தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் பங்குபெறுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவி மகேஷ்வரி, காவ்யா ஆகியோருக்கு வாழ்த்துக்களைதெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி., ஸ்ரீநாதா, மாவட்ட கல்வி அலுவலர் கௌசர், விளையாட்டுஅலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!