ADVERTISEMENT
சென்னை: 'காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது' என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருப்பது தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் 2021 சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளிலும் வென்றது.
இதனால் ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களே கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று 'யு டியூப்' சேனலுக்கு பேட்டியளித்த அழகிரி 'கூட்டணியின்றி எந்த கட்சியும் வெல்ல முடியாது. காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது.
'காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் வெற்றி பெற மாட்டார்கள் என்கின்றனர். இதை 2019 லோக்சபா தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் முறியடித்து விட்டோம். எனவே, 2024-ல் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம்' என கூறியுள்ளார்.
இது தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஸ்டாலின் சிறந்த முதல்வர்' என கூறியபடியே, 'காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது' என கூட்டணிக்குள் அழகிரி கல்லெறிந்துள்ளதாக, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் 2021 சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளிலும் வென்றது.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க தி.மு.க., ஆலோசித்து வருகிறது.
இதனால் ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களே கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று 'யு டியூப்' சேனலுக்கு பேட்டியளித்த அழகிரி 'கூட்டணியின்றி எந்த கட்சியும் வெல்ல முடியாது. காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது.

இது தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஸ்டாலின் சிறந்த முதல்வர்' என கூறியபடியே, 'காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது' என கூட்டணிக்குள் அழகிரி கல்லெறிந்துள்ளதாக, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
வாசகர் கருத்து (15)
வழக்கமா "தள்ளபதி" அப்படின்னுதானே சொல்லுவீங்க ????
"காங்கிரஸ் இல்லாமல் வெற்றி இல்லை". அது அந்தக்காலம். இப்ப, காங்கிரஸ் இருந்தால் வெற்றி என்பதே கிடையாது. அட, டெபாசிட் கிடைப்பதே அரிது...
யாருக்கு? எதிர்கட்சிக்கா வெற்றி இல்லை? உண்மைதான்
அழுது அழுது சீட் வாங்கிய சமயம் இந்த டயலாக்கை எடுத்து விட்டிருக்கலாம்.
பதிமூனு பேரு தூக்கி நார்காலில உக்கார வச்சி புட்டு இப்போ வேட்டி குள்ளா ஒனானை விட்ட மாதிரி பொழம்பி அழுதா எப்படி....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கூட்டணி கட்சிகளை அரவணைத்து இதயத்திலே இடம் தருபவர் எங்கள் தளபதி. பிஜேபி யுடன் காங்கிரசும் சேர்ந்து முக்கோணப் போட்டியாகும்.