ADVERTISEMENT
சிங்கப்பூர் சிட்டி: ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வரும் டிச.05ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்(74), உடல் நலக்குறைவு காரணமாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். நீதிமன்றம் அனுமதியுடன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா, தந்தைக்காக தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளார். வரும் டிச.05-ம் தேதியன்று லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லாலு மகன் தேஜாஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்து (10)
ஊழ்விவினை தன்னைச் சுடும். அது சிங்கப்பூரா, பீஹாரா என்றுதான் தெரியல.
குடும்பத்தையே மறந்து அல்லும் பகலும் நாட்டுக்காகவே உழைத்த களைப்பில் கிட்னி அவுட் ஆகி விட்டது பாவம்+++கறை படியாத கரங்களுக்கு, தேசிய ஒருங்கிணைப்புக் கொள்கைளுக்கு சொந்தமான மா மனிதர்++++பொழச்சு வரட்டும்.+++நாட்டுக்கு இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டிருக்கு.
பாருங்கள், எந்த காலத்திலேயோ நடந்த ஊழல். ஆனால் முக்கிய குற்றவாளி இன்றும் 'சிறப்பாக' இருக்கிறார். இந்த உடல் உபாதை இல்லாமல் இருந்திருந்தால், மேலும் பல ஊழல்களை செய்து 'ஊழல் சாம்ராட்' என்று பட்டம் பெற்றிருப்பார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இப்ப தெரியுது மாட்டு தீவனம் எல்லாம் எங்க போச்சுன்னு.