ADVERTISEMENT
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி மாற்றம் நடந்துள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வாசகர் கருத்து (6)
இதுபோன்று கிடுக்கிப்பிடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ் மாநில முதல்வர் மகன் மற்றும் MLA நடிகர் உதயநிதி மற்றும் பல ஏமாற்று நடிக, நடிகைகள்மீது போடுமா? நான் கூறிய அவர்கள் தவறே செய்ய வில்லையா? அல்லது அவர்களின் அரசியல் பலம் கண்டு பயமா?
என்னவோ விஜய் தேவரகொண்டா மட்டும்தான் விதி மீறினாரா .
On screen heroes. But off screen frauds.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை கிடுக்கி...ஹி...ஹி...ஹி...நம்ம அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவிடம் எப்ப கிடுக்கி போடுவீங்க ஆபீஸர்ஸ்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சும்மா கண் துடைப்பு. இப்போ பிஜேபி சப்போர்ட் வேணும் அதன் இந்த பிள்ளை பூச்சி வச்சு விளையாட்டு காட்டுது. உங்களுக்கு சப்போர்ட் சொன்ன அடுத்த நிமிடம் கட்டி புடிச்சு உருளுணவனுங்க. எவனும் நாட்டுக்குக்கு நல்லது பண்ண போறது கிடையாது.