ADVERTISEMENT
வாஷிங்டன்: இந்தியா - சீனா இடையிலான உறவில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது. இதனை, அமெரிக்க பார்லிமென்டில், பெண்டகன் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான நட்பில் இந்தியா இன்னும் நெருக்கம் காட்டி விடக்கூடாது என்பதற்காக, அந்நாட்டுடனான எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்தியாவுடனான தங்களது நட்பில் தலையிட கூடாது என அமெரிக்காவிற்கு சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
அதேநேரத்தில் 2021 ம் ஆண்டில் இந்தியாவுடனான எல்லையில் ராணுவத்தை குவிக்கும் பணியிலும், அந்த பகுதிகளில் உள்கட்டமைப்பை அதிகப்படுத்தும் பணியிலும் சீனா ஈடுபட்டது.

இரு நாட்டு எல்லைப்பகுதியில் முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். படைகளை திரும்ப பெற வேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தின. ஆனால், அதனை அந்த நாடுகள் ஏற்கவில்லை.
தங்களுக்கு சொந்தமான பகுதியில் இந்தியா உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக சீனா குற்றம்சாட்டியது. அதே நேரத்தில் இந்தியாவின் எல்லைக்குள் சீனா ஊடுருவியதாக இந்தியா குற்றம்சாட்டியது. இவ்வாறு அந்த அறிக்கையில் பெண்டகன் கூறியுள்ளது.
வாசகர் கருத்து (7)
சத்திரத்து சாப்பாட்டுக்கு தாத்தையங்கார் உத்தரவு . இவன் என்ன கேனையனா இல்லைகார்ய வாதியா?இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
சப்ப மூக்கா. உறவு ன்னா என்னன்னு தெரியுமா? முதல்ல ஊரடங்கு விஷயத்தை பாரு. உலகமே சிரிக்கிறது.
ஆமாம், இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் பரஸ்பர உறவு இருக்கிறதா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
A ல் இருந்து Z வரை அந்த நாட்டு பொருள்களை பயன்படுத்துகிறோம், தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தினால் கூட இதை மாற்ற முடியாது.