ADVERTISEMENT
சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக கடின முயற்சி செய்து வருவதாக, அக்கட்சி தலைவர் அண்ணாமலை தெரித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடந்த 28ம் தேதி அன்று புறப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும் 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக நமது மத்திய இணை அமைச்சர் முருகனுக்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளின் விவரங்களை தெரிவித்து, நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்டு வர தமிழக பாஜ., வின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களை விடுவிக்கவும், சிறைபிடிக்கப்பட்ட 5 விசைப்படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிகின்றோம்.
சிறை பிடிக்கப்பட்ட நம் மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்துவரும் நமது மத்திய இணை அமைச்சர் முருகனுக்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் தமிழக பா.ஜ., சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக பா.ஜ., மீனவர் சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். அதேபோல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குகாக பா.ஜ., கடின முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
எனக்கு தெரிந்து இருக்க நாட்டு பிரச்னையை மத்திய அரசு தான் கையாள வேண்டும். அண்ணாமலையார் சொல்வது பார்த்தால் ஏதோ பரிதாபப்பட்டு செய்வது போலல்லவா இருக்கிறது. மத்திய அரசு அங்கே கடற்படை கண்காணிப்புக்கும் உடனடி தகவல் பரிமாற்றத்திற்கும் ஏற்பாடு செய்யலாமே.
அடிவயிறு கலங்குது ஹி ஹீஈஈ
திமுக காங்கிரஸ் கூட்டு காட்டாட்சி நேரத்தில் 700 மீனவர்கள் சுட்டு படுகொலை செய்யபட்ட னர். இப்போது அப்படி எந்த சம்பவமும் நடப்பதில்லை. 🤔 ஆனாலும் நன்றி கெட்ட டுமீல் புரிந்து கொள்ளவும் மாட்டான்.
திமுக காங்கிரஸ் கூட்டு காட்டாட்சி நேரத்தில் 700 மீனவர்கள் சுட்டு படுகொலை செய்யபட்ட னர். இப்போது அப்படி எந்த சம்பவமும் நடப்பதில்லை. 🤔 ஆனாலும் நன்றி கெட்ட டுமீல் புரிந்து கொள்ளவும் மாட்டான்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
டண்டணக்கா மலை ஒரு பொய்யர்.புளுகு மூட்டை