ADVERTISEMENT
புதுச்சேரி: நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று (நவ.,30) அதிகாலை நடைபயிற்சிக்காக ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யானை பாகன் தெரிவித்துள்ளார்.

வனத்துறையினர் யானை லட்சுமியின் உடலை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து யானையின் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு லட்சுமி யானையில் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இறப்புக்கான காரணம் குறித்து அறிவதற்காக கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பிறகு யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லட்சுமி உயிரிழந்ததால், கோயில் நடையும் அடைக்கப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. தற்போது லட்சுமிக்கு 32 வயது.
கவர்னர், முன்னாள் முதல்வர் அஞ்சலி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சுவுந்தரராஜன் யானை லட்சுமிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில் அரசு மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து புதிய யானையை வாங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் யானையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் யானையின் இறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து (3)
Our Dearest Lakshmi kutty.... We pray for your armashanthi..... Walking God.... Pondicherry salutes you Dear Kutty Yaanai
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பிராணி என்றும் பாராமல், அதன் இறுதி யாத்திரையில் மக்கள் வெள்ளம். இதுதான் இந்திய கலாச்சாரம். மற்ற உயிரினங்களையும் சமமாக பார்ப்பதே இந்திய கலாச்சாரத்தின் ஒரு சிறப்பு. யானை லட்சுமியின் ஆன்மா சாந்தியடையட்டும்.