ADVERTISEMENT
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன. வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராஜு, சித்தார்த் தவே வாதாடினர். அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடினர்.
அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், இன்று, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்தனர். அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போதைய அமைச்சர் வேலுமணிக்கு எதிராக குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன. வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராஜு, சித்தார்த் தவே வாதாடினர். அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடினர்.
அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், இன்று, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்தனர். அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அரசு ராஜினாமா செய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும் கைது என்ற பரமபரை பழக்கத்தை நீதி மன்றங்கள் அறவே முதலில் ஒழிக்க வேண்டும். நீதி மன்றங்களில் புகார் கொடுத்து நிரூபணமானபின்தான் கைது என்ற சட்டம் கொண்டுவந்தால்தான் நாடு முன்னேறும். எடுத்ததெதுக்கெல்லாம் கைது என்ற பழக்கம் மக்களை நடுங்க வைக்கிறது