ADVERTISEMENT
சேலம்: முதல்வர் ஸ்டாலின் தனது கடமையில் இருந்து தவறுகிறார் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
தனது சொந்த தொகுதியான எடப்பாடியில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை துவக்கி வைத்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்காக ஜனாதிபதியிடம் விருது வாங்கினோம். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் எண்ணி பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அடியோடு, படுபாதாளத்திற்கு சீர்கெட்டுள்ளது.
![Latest Tamil News]()
போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தான் போலீசார் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டத்தை தடை செய்யவில்லை. அவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். ராமநாதபுரத்தில் ரூ.360 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் திமுக.,வை சேர்ந்த கவுன்சிலருக்கு ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது மட்டும் இப்படி என்றால், கண்டுபிடிக்க முடியாமல் எவ்வளவு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியவில்லை.
ஏனென்றால், இவர் பொம்மை முதல்வர், திமையற்ற முதல்வர். போலீஸ்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பவர் முதல்வர். போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையை கையாளவில்லை.
திமுக பொதுக்குழுவில் கூட, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நான் காலையில் கண்விழிக்கும்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கண்விழிக்கிறேன். கட்சிக்காரர்கள் என்ன நடக்குமோ என்ற பயத்தில் கண்விழிக்கிறேன் என கூறினார். அது அவர் கொடுத்த வாக்குமூலம் நாங்கள் சொல்லவில்லை.
இது, திமுகவை சேர்ந்தவர்கள் போதைப்பொருளில், அராஜகத்தில் ஈடுபடுவது தெள்ள தெளிவாகிவிட்டது. அக்கட்சி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனால், தான் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்கிறோம்.
தமிழகத்தில் அமைதி பூங்காவாக திகழ்வதால், சிலருக்கு வயிறு எரிவதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர்களால் மக்கள் வயிறு எரிகிறது. மக்கள் கொந்தளிப்பில், கோபத்தில் வயிறு எரிகிறது. தமிழகத்தில் கொலை கொளளை திருட்டு பாலியல் சம்பவம் அன்றாடம் நடக்கிறது.
இதற்கு ஊடக காட்சிகள் தான் சாட்சி. எதிர்க்கட்சிகள் சொல்வதாக நினைத்து முதல்வர் பேகிறார்.
அன்றாடம் வரும் செய்தியை வைத்து தான் நாங்கள் சொல்லுகிறோம். எதிர்க்கட்சி என்ற முறையில் தமிழகத்தில் வரும் பிரச்னைகள் குறித்து பத்திரிகைகள் அறிக்கை வெளியிடுகிறோம். அதை உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முதல்வரின் கடமை.
நாங்கள் எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றுகிறோம். ஆனால், ஸ்டாலின் கடமையில் இருந்து தவறுகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறாரே தவிர நாட்டு மக்களை காப்பாற்றும் செயலில் ஈடுபடவில்லை.
![Latest Tamil News]()
நடைபயிற்சியின் போது, சுகாதார அமைச்சரிடம் மகன் நடித்த படம் பற்றி கேட்கிறார். இதுவா நாட்டிறகு முக்கியம். நாட்டு மக்களை பற்றி சந்திப்பது தான் முதல்வரின் கடமை. ஆனால், வீட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதல்வர் ஸ்டாலின். நாட்டில் எவ்வளவு பிரச்னை உள்ளது. அதனை தீர்வு காண்பது குறித்து கேட்கிறீர்களா? தன் மகன் படம் சிறப்பாக ஓடுகிறதா, கஜானா நிரம்புமா, நல்ல வசூலாகிறதா என்று கேட்டால், நாட்டு மக்களின் வயிறு எரிச்சலடையும்.
நம்மை பற்றி கேள்வி கேட்க மாட்டேன் என்கிறாரே, மகன் பற்றி மட்டும் தான் கேட்கிறார் என மக்களின் வயிறு எரிகிறது. பொம்மை முதல்வர் திறமையற்ற அரசு இருப்பதால் விலைவாசி உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
தனது சொந்த தொகுதியான எடப்பாடியில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை துவக்கி வைத்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பழனிசாமி கூறும்போது, கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்று விட்டதாக நேற்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்காக ஜனாதிபதியிடம் விருது வாங்கினோம். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் எண்ணி பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அடியோடு, படுபாதாளத்திற்கு சீர்கெட்டுள்ளது.

போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தான் போலீசார் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டத்தை தடை செய்யவில்லை. அவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். ராமநாதபுரத்தில் ரூ.360 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் திமுக.,வை சேர்ந்த கவுன்சிலருக்கு ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது மட்டும் இப்படி என்றால், கண்டுபிடிக்க முடியாமல் எவ்வளவு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியவில்லை.
ஏனென்றால், இவர் பொம்மை முதல்வர், திமையற்ற முதல்வர். போலீஸ்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பவர் முதல்வர். போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையை கையாளவில்லை.
திமுக பொதுக்குழுவில் கூட, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நான் காலையில் கண்விழிக்கும்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கண்விழிக்கிறேன். கட்சிக்காரர்கள் என்ன நடக்குமோ என்ற பயத்தில் கண்விழிக்கிறேன் என கூறினார். அது அவர் கொடுத்த வாக்குமூலம் நாங்கள் சொல்லவில்லை.
இது, திமுகவை சேர்ந்தவர்கள் போதைப்பொருளில், அராஜகத்தில் ஈடுபடுவது தெள்ள தெளிவாகிவிட்டது. அக்கட்சி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனால், தான் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்கிறோம்.
தமிழகத்தில் அமைதி பூங்காவாக திகழ்வதால், சிலருக்கு வயிறு எரிவதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர்களால் மக்கள் வயிறு எரிகிறது. மக்கள் கொந்தளிப்பில், கோபத்தில் வயிறு எரிகிறது. தமிழகத்தில் கொலை கொளளை திருட்டு பாலியல் சம்பவம் அன்றாடம் நடக்கிறது.
இதற்கு ஊடக காட்சிகள் தான் சாட்சி. எதிர்க்கட்சிகள் சொல்வதாக நினைத்து முதல்வர் பேகிறார்.
அன்றாடம் வரும் செய்தியை வைத்து தான் நாங்கள் சொல்லுகிறோம். எதிர்க்கட்சி என்ற முறையில் தமிழகத்தில் வரும் பிரச்னைகள் குறித்து பத்திரிகைகள் அறிக்கை வெளியிடுகிறோம். அதை உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முதல்வரின் கடமை.
நாங்கள் எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றுகிறோம். ஆனால், ஸ்டாலின் கடமையில் இருந்து தவறுகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறாரே தவிர நாட்டு மக்களை காப்பாற்றும் செயலில் ஈடுபடவில்லை.

நடைபயிற்சியின் போது, சுகாதார அமைச்சரிடம் மகன் நடித்த படம் பற்றி கேட்கிறார். இதுவா நாட்டிறகு முக்கியம். நாட்டு மக்களை பற்றி சந்திப்பது தான் முதல்வரின் கடமை. ஆனால், வீட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதல்வர் ஸ்டாலின். நாட்டில் எவ்வளவு பிரச்னை உள்ளது. அதனை தீர்வு காண்பது குறித்து கேட்கிறீர்களா? தன் மகன் படம் சிறப்பாக ஓடுகிறதா, கஜானா நிரம்புமா, நல்ல வசூலாகிறதா என்று கேட்டால், நாட்டு மக்களின் வயிறு எரிச்சலடையும்.
நம்மை பற்றி கேள்வி கேட்க மாட்டேன் என்கிறாரே, மகன் பற்றி மட்டும் தான் கேட்கிறார் என மக்களின் வயிறு எரிகிறது. பொம்மை முதல்வர் திறமையற்ற அரசு இருப்பதால் விலைவாசி உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
வாசகர் கருத்து (14)
இருக்கலாம் ....... நிதிக்காக நிதிக்குடும்பம் எதையும் செய்ய வாய்ப்பிருக்கிறது .......
போதைப் பொருள் கடத்தலில் திமுகவினர்... முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார் இதை பற்றி. இல்லை என்று எப்பொழுதும் போல் மறுப்பார் அவ்வளவுதான். ஆம், எதிர்க்கட்சிகளின் சதி இது என்றும் சொல்வார்.
தொழிலில் போட்டி இருக்கலாம்... ஆனால் பொறாமை இருக்கக் கூடாது மிஸ்டர் பழனியாண்டி....
முதல்வரைத் தூங்க விடாதீகள். தட்டி எழுப்பிக் கொண்டே இருங்கள் " விடியல்" பிறக்கும்.. இலங்கை மீனவர்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள். அப்புறம் ஜெயசங்கருக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பிடிபட்டது போதை பொருளோ வெடிபொருளோ இல்லை கடலோரக்காவல் படை சொல்லிருக்காங்க,