Load Image
Advertisement

கருப்பு துண்டை ஒதுக்கி வைத்து குங்குமம் இட்டு தீர்த்தம் குடித்து சாமி கும்பிட்ட வைகோ: பரவும் வீடியோ

 கருப்பு துண்டை ஒதுக்கி வைத்து குங்குமம் இட்டு தீர்த்தம் குடித்து சாமி கும்பிட்ட வைகோ: பரவும் வீடியோ
ADVERTISEMENT
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருப்பு துண்டு அணிந்து ஈவெரா கொள்கைகளை பேசி வந்த நிலையில், தற்போது கருப்பு துண்டை ஒதுக்கி வைத்துவிட்டு, தீர்த்த பிரசாதம் ஏற்றுக்கொண்டு, குங்குமமிட்டு சாமி தரிசனம் செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வாழ்க்கையில் இருந்து வருகிறார் வை.கோபால்சாமி என்ற வைகோ. 1964ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை முன்னிலையில் ஹிந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார்.

ஈவெரா கொள்கையில் ஈர்க்கப்பட்ட வைகோ, திமுக.,வில் இணைந்து பெரிய பேச்சாளார் ஆனார். அப்போது முதல் ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள் பற்றியும் ஹிந்துக்களின் மனம் புண்படும்படி மேடை பேச்சுகளில் பேசிவந்தார்.


வாழ்நாளில் ஈவெரா கொள்கைகளை மேடையில் முழங்கி, கருப்பு துண்டு அணிந்து அடையாளம் காணப்பட்ட வைகோ, திமுக.,வில் இருந்து பிரிந்து மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் (மதிமுக) என்ற கட்சியை துவக்கினார்.

புதிய கட்சியாக இருந்தாலும், அதே கொள்கையை கடைப்பிடித்து ஹிந்து கோவில்களுக்கு செல்வதில்லை, அப்படியே சென்றாலும் சாமி தரிசனம் செய்வதில்லை. தற்போது திமுக கூட்டணியில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.

Latest Tamil News
அப்படி இருக்கையில் தற்போது தனது கொள்கை மட்டுமல்ல, கருப்பு துண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு பயபக்தியுடன் அவர் சாமி தரிசனம் செய்வதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தான் பிறந்த கலிங்கப்பட்டியில் உள்ள மேல மரத் தோணி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்யும் வீடியோவை இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.

வைகோவின் தாத்தா கோபாலசாமி 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய இக்கோவிலை தனது சொந்த செலவில் புனரமைப்பு செய்து வருகிறார்.

Latest Tamil News
அந்த வீடியோவில், பூஜாரி தீபாராதனை காட்ட அதனை பயபக்தியுடன் தொட்டு வணங்குகிறார் வைகோ. அருகில் நிற்பவரிடம் தன் அடையாளமாக கருதப்படும் கருப்பு துண்டை தோளில் இருந்து எடுத்து கொடுத்துள்ளார். கருப்பு துண்டுடன் அந்த நபர் ஓரமாக நிற்கிறார்.

பிறகு உடனிருப்பவரிடம் பணத்தை பெற்று பூஜாரி தட்டில் காணிக்கை செலுத்துகிறார். அதனை த்தொடர்ந்து பூஜாரி அளித்த தீர்த்த பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு, குங்குமம் எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கிறார். கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகள் குறித்தும் அங்கிருந்தவர்களிடம் பேசுகிறார்.

கருப்பு துண்டு அணிந்து நாத்திகம் பேசிவந்த வைகோ, ஆன்மிகம் பாதைக்கு திரும்பியதற்கு வரவேற்பு எழுந்துள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


வாசகர் கருத்து (103)

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    க்ரிப்ட்டோக்கள் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவார்கள்.. இந்துக்களிடம் ஒரு பெயரையும் சர்ச்சியில் வேறொரு பெயரை கூறுவது போல.. விபூதி வச்ச சீமான், குங்குமம் வைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, வைக்கோ எல்லாம் இந்த ரகம்தான்.. நிறைய்ய மதமாரிகளும் இப்படியே உலவுகிறார்கள்.. மக்கள் ஏமாறாமல் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

  • Aarkay - Pondy,இந்தியா

    ஹையா ஆமை

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    வேறு வழி இல்லை கடவுள் பயம் இருக்கத்தானே செய்யும் தி மு க, தி க, மதிமுக அதி முக வீ சி க போன்ற கட்சிகள் இந்து மத எதிர்ப்பு அல்ல இந்துத்துவ எதிர்ப்பே மேலும் மூட நம்பிக்கையில் பொருளாதாரத்தை இலக்கவேண்டாம் என்றுதான் கூறி வருகின்றனர்

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Panaththukkaakavum pathavikkaakavum yethaiyum seyyum gopal. Karunavai kandapadi thittivittu Stalin kaalil vizhunthathu thaanai intha thanmaana asingam

  • S.L.Narasimman - Madurai,இந்தியா

    வை. கோபல்சாமியாக கடவுடளிடம் வந்து அவர் மனப்பூர்வமாக வணங்கி வேண்டுவது பரிகாசத்திற்குட்பட்டது அல்ல. பெருமாள் அவருக்கு அருள்பாலிக்காட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement