Load Image
Advertisement

48,500 ஆண்டு பழமையான ஜாம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடிப்புபிரிட்டன்: 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு பழமையான ''ஜாம்பி வைரஸ்''- ஐ ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர்.

Latest Tamil News


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின், இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. இந்நிலையில் உலகில் இருக்கும் பல்வேறு வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஆய்வாளர்கள் "ஜாம்பி வைரஸ்" -ஐ கண்டறிந்தனர்.

Latest Tamil News

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியவதாவது: ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த "ஜாம்பி வைரஸ்" பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற வைரஸ்கள் தாக்கினால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் ரொம்வே அதிகம். அதே நேரம் விலங்குகள் அல்லது மனிதர்களைத் தாக்கும் எதாவது வைரஸ் இதேபோல பனிப்பாறை உருகுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது பெரியா பாதிப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (9)

 • Mohan - Thanjavur ,இந்தியா

  எப்பா, விஞ்ஞானிகளா மொத்த வைரசையும் புடிச்சி குடும்பக்கட்டுப்பாடு பண்ணிவிடுங்கையா புண்ணியமா போவும்.

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  48,500 வருஷங்கள் புதைந்து கிடக்கிற வைரஸை எல்லாம் தோண்டியெடுத்து வெளியே உயிரோட உலாவவிட்டிருக்கீங்களே (அதாவது சும்மா கிடந்த சங்கையெடுத்து ஊதிக் கெடுத்திடீங்களே). இனி அது மிருகத்தக் கடிச்சு, அப்புறம் மனுஷனைக் கடிச்சு, உலகத்தில் உள்ள எல்லோரையும் கடிச்சு சாகடிக்க ஆரம்பிக்கட்டும். அப்புறம் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கத் தொடங்குங்க. அதற்குள்ள மொத்த மக்களையும் கொன்னு முடிக்கட்டும். அய்யா விஞ்ஞானிகளே இப்போதிருந்தே தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு வேலைகளை சீக்கிரம் ஆரம்பித்து விடுங்கள். உங்களுக்கு ரெம்ப புண்ணியமாப் போகும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

 • Raj - Chennai,இந்தியா

  விஞ்ஞானி தான் ஒத்துக்கிறோம், அதுக்காக 48500 வருடங்களுக்கு முன் சொல்லி புருடா விட கூடாது.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  புதிய புதிய வைரஸ்களை கண்டறியும் நமது விஞ்ஞானிகள், அதிலிருந்து மக்களை எப்படி பாதுகாக்கவேண்டும் என்று கண்டறிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். சமீப நாட்களில் பலருக்கு, குறிப்பாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து இருமல் வந்து அதிக பாதிப்பு ஏட்படுத்துகிறது. மருத்துவர்கள் கூறுகின்றனர், கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு immune tem கடுமையாக இருப்பதால், அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால் அப்படி ஏட்படுகிறது என்று. இதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி தங்களை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். Need experts advice please.

 • ராமகிருஷ்ணன் -

  அந்த வைரஸை பத்திரமாய் சீனாவின் வுஹானில் விட்டு விடவும். அதையும் தின்னு செமிச்சுருவானுங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement