ADVERTISEMENT
புதுச்சேரி: புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று (நவ.,30) அதிகாலை உயிரிழந்தது. நடைபயிற்சிக்காக ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யானை பாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை லட்சுமியின் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருந்திருக்கலாம் என உடலை ஆய்வுக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. தற்போது லட்சுமிக்கு 32 வயது.
வாசகர் கருத்து (3)
காட்டுக்குள் சுதந்திரமாக திரியவேண்டிய மிருகத்தை குறுகிய இடத்தில் நீண்ட காலம் கட்டி வைத்தால் அது உடல், மன ரீதியாக பாதிக்கப்படாதா?
அருள்மிகு மணக்குள விநாயகரை தாிசிக்கும் பொழுதெல்லாம், யானை லட்சுமியையும் தாிசித்திருக்கிறேன். இன்று யானை லட்சுமி இல்லையென்பது மிகவும் வருத்தமாக உள்ளது. மணக்குள விநாயகா் திருவடிகளில் இளைப்பாறட்டும். ஓம் ஷாந்தி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
பீட்டா மற்றும் வனத்துறை இவர்களால் இந்த யானை போரெஸ்ட்இல் விடப்பட்டது அங்கு புதிய இடம், அதனால் உடம்பு சரி இல்லாமல் மீண்டும் கோவிலுக்கு அழைத்து வர பட்டு, இங்கு கொஞ்சம் நாள் இருந்து உயிரை விட்டது. இதற்கு முக்கியமானவர்கள் இந்த பீட்டா அமைப்பினர் மற்றும் சில வனத்துறையினர். இந்த பீட்டா ஆளுங்களை இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும். ஐரோப்பாவில் நாள் ஆண்டுக்கு லட்ச கணக்கான மாடுகளை கொன்று தின்கிறார்கள், அங்கு கேட்க முடியவில்லை இங்கு வந்து ஜல்லிக்கட்டு கூடாது, யானைகள் கோவில்களில் இருக்க கூடாது என்று. இதற்க்கு ஒரே வழி பொது சிவில் கோட்.