Load Image
Advertisement

ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போக்சோ உள்ளிட்ட 10 வழக்குகளில் தொடர்பு

 ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போக்சோ உள்ளிட்ட 10 வழக்குகளில் தொடர்பு
ADVERTISEMENT
'பாம் போட்டு கொல்வோம்' என ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் மணிமாறன், 49, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 'போக்சோ' வழக்கில் சிக்கியதும் அவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி, 34. சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவ படை வீரர். கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரியும் இவர் தற்போது மேகாலயா மாநிலத்தில் பணியில் உள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் விதமாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை விமர்சித்து முகநுாலில் இவர் கருத்து பதிவிட்டார்.

இதையடுத்து வி.சி., லத்துார் ஒன்றிய செயலர் மணிமாறன் உள்ளிட்டோர் அவருக்கு 'பாம் போட்டு கொல்வோம்' என மொபைல் போன் வழியாக, கொலை மிரட்டல் விடுத்தனர். தன்னை மிரட்டியதையும் அவர் முகநுாலில் பதிவிட்டதால் வைரலானது.

குருமூர்த்தியை தொடர்பு கொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்' என தெரிவித்தார்.

ராணுவ படை வீரரையே மிரட்டிய வி.சி., நிர்வாகி மணிமாறன், கூவத்துார் அடுத்த கடலுார், உத்திராடம் என்பவரின் மகன். வி.சி., ஒன்றிய செயலர். இவருக்கு, கடலுார், கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதிகளில் வீடுகள் உள்ளன. புதுப்பட்டினம் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பள்ளி மாணவியரை, பாலியல் ரீதியாக சீண்டியதாக, இவர் மீது தொடர்ந்து புகார் எழுந்தது.

Latest Tamil News
இவர் 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், 'பிறரிடம் கூறினால் கொன்று விடுவேன்' என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடந்த ஆகஸ்ட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் நடத்தினர்.

மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் மணிமாறனை கைது செய்தனர். வாயலுார் - கடலுார் பாலாற்று தடுப்பணை கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியது; அரசு பஸ் டிரைவரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது உள்ளன.

கடந்த, 2010ம் ஆண்டு முதல் இவர் மீது குற்றப் பதிவேடும் உள்ளது. கல்பாக்கம் போலீசாரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு உள்ளது.

கடந்த நவ., 25ல், பவுஞ்சூர் அடுத்த கண்டிகை பகுதியில் குவாரி மண் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி அவர் தன் ஆதரவாளர்களுடன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டதால், அப்பகுதியை சேர்ந்த தர்மன் மகன் கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.

அணைக்கட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வரை போக்சோ உள்ளிட்ட 10 வழக்குகள் மணிமாறன் சிக்கி உள்ளார். இவர்தான் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.- நமது நிருபர் -


வாசகர் கருத்து (56)

 • Emesgee - Yokohama,ஜப்பான்

  இவனுங்களயெல்லாம் பாகிஸ்தான் பார்டரில் நிக்க வக்கணும்.

 • Jai -

  குருமா பேசிய பேச்சு கருத்துக்கும் என்று தோன்றவில்லை. அவருடைய மேலிடமான திமுகவில் இருந்து இந்த அறிக்கை படிக்க சொல்லி இருக்கலாம்.

 • adalarasan - chennai,இந்தியா

  என்ன ஆச்சரியம் என்றால், இத்தனை குற்றங்களை செய்து விட்டு ஜாலியாக வெளியில் இருக்கிறார்? ராணுவ வீரரை மிரட்டுகிறார்? யார் யார் மீதோ, குண்டர் சட்டத்தை போடுகிறார்கள் ? ஆனால் இவர்....???

 • Anbarasan - Karaikal,இந்தியா

  இந்த மாதிரியான தேசத்துக்கு விரோதமான குற்றங்களை செய்ய உருவாக்கிய தருதலைகளின் தலைவன் தான் .இக்கட்ச்சியை தடை செய்தால் மட்டுமே நாடு சிறப்படையும்.

 • மோகனசுந்தரம் -

  குருமா சரியாகத்தான் கூறியுள்ளான். ஒவ்வொரு சிறுத்தைகள் மேலும் பத்து எஃப் ஐ ஆர் பதிவு பண்ணால் தான் அவன் ஆம்பளை என்று கூறினான். அதைப்போலவே இவன் மேலும் 10 fir உள்ளது. இவன்தான் உண்மையான சிறுத்தை குட்டி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement