Load Image
Advertisement

ரேபிடோ பைக்கில் பயணித்த இளம் பெண் கூட்டு பலாத்காரம்

 ரேபிடோ பைக்கில் பயணித்த இளம் பெண் கூட்டு பலாத்காரம்
ADVERTISEMENT

பெங்களூரு,: பெங்களூரில், 'ரேபிடோ' பைக் டாக்சியில் வந்த கேரள இளம்பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பீஹாரை சேர்ந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில், கேரளாவை சேர்ந்த, 22 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார். கடந்த 24ம் தேதி பணி முடிந்து, அதே பகுதியில் உள்ள தன் நண்பர் வீட்டுக்கு சென்று, மது அருந்தியுள்ளார்.

Latest Tamil News


அங்கிருந்து, நள்ளிரவில் எலக்ட்ரானிக் சிட்டியின் நீலாத்ரி நகரில் உள்ள தன் அறைக்கு செல்ல, 'ரேபிடோ' பைக் டாக்சி புக் செய்து, வரவழைத்தார். பைக் டிரைவர் சஹாபுதீன், 26, அப்பெண்ணை ஏற்றி சென்றார். வழியில், 'எனக்கு சிகரெட் வேண்டும்; கடையில் வாங்கி வா' என்று டிரைவரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

கையில் பணம் இல்லாததால், தன் நண்பர் அர்பத் ஷெரீப், 24, என்பவரை தொடர்பு கொண்டு, 'ஆன்லைன்' மூலம் பணம் அனுப்ப கேட்டுள்ளார்.'இந்த வேளையில் எதற்காக பணம்' என நண்பர் கேட்டதற்கு, விஷயத்தைகூறியுள்ளார்.அப்போது, 'நம் அறைக்கு இளம்பெண்ணை அழைத்து வா' என ஷெரீப் கூறியுள்ளார்.இதன்படி, போதையில் இருந்த பெண்ணை அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தன் தோழியுடன், ஷெரீப் காத்திருந்தார். தோழி முன்னிலையிலேயே இளம்பெண்ணை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின், மூவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.நினைவு திரும்பிய இளம்பெண், தனக்கு நேர்ந்த கதியை நினைத்து கதறி அழுதுள்ளார்.

யாரிடமும் கூறாமல் தனது அறைக்கு சென்றுள்ளார். மறுநாள், வயிறு வலிப்பதாக அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர்களிடம் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் ஆலோசனைப்படி, எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து, சஹாபுதீன், ஷெரீப் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவரும் பீஹாரை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களுடன் இருந்த தோழி குறித்து விசாரணை நடக்கிறது.


வாசகர் கருத்து (17)

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  இந்த பெண் சமூகத்தின் கேடு, காசு பணம் கையில் வந்தால் பெற்றோர்கள் இவர்களின் கண்களுக்கு தெரிய மாட்டார்கள், நவீன உலகம் எது, தன்னை கூட தற்காத்து கொள்ள முடியவில்லை, இதுதான் இந்த பெண்ணின் நவீன உலகமா, காம சுகத்திற்கு ஏங்கி எங்கு கிடைக்கும் என்று சுற்றி உலவும் இளவல் பசங்க என்ன செய்வார்கள் இப்படித்தான் செய்வார்கள் இதுக்கு மதம் ஜாதி என்றெல்லாம் பார்க்க முடியாது, ஏன், நான் உயர் ஜாதி வர்க்கம் என்று சொல்ல கூடியவன் தான் முதல் நபராக எந்த பெண்ணையும் சீரழிகிறான், பெண்களே அதிக வருமானம் வருகிறது என்னை யார் கேள்வி கேட்க முடியாது என்ற மேல்மட்ட தனத்தில் இருக்க வேண்டாம், அது அழிவிப்பதை நீங்கள் உணர வேண்டும்.

 • வீரா -

  குடி பழக்கம், சிகரெட், ஆண் நண்பர் நள்ளிரவு சகவாசம், முன் பின் தெரியாதவனை சிகரெட் வாங்கி தர சொல்வது, நிலை மறந்து முன் பின் தெரியாதவனுடன் அவன் வீட்டிற்கு செல்லுவது... இதில் எது பெரிய குற்றம் என்று தெரியாத அளவு பெண் ஆட்டம் போட்டால் என்ன செய்வது?. அவர் மீது பரிதாபம் வரவழைக்க அவரது இளம் வயது தவிர வேறு காரணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணும் காதும் வைத்தார் போல அவள் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மது அருந்த அழைத்த நண்பர் பாக்கியசாலி கல்யாணம் செய்து கொள்ளுபவன் துரதிஷ்டசாலி.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  வயிற்று வலி வராமல் இருந்திருந்தால் சாதாரணமாகக் கடந்து போயிருப்பாள். ஊரில் எல்லாரும் இப்படித்தானா?

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Barkat Ali ivarkalukku yethiraaka patwa azhaippu vidunkal. Ivarkalai ponravarkslai unkal samookathil irunthu othikki vaiyunkal. Ithai anaiththu mathathinarum pinparra vendum.

 • Dharmavaan - Chennai,இந்தியா

  இவனெல்லாம் பிஹரி என்று போய் சொல்கிறார்கள். இவர்கள் வங்க தேச, ரொஹிங்கா கள்ள குடியேறிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement