ADVERTISEMENT
கடற்படை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரின் மனைவி, தனது கணவரின் மேல் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தனக்கு அரசு வேலை தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரவேல்.35. மீனவர். இவர் காரைக்காலைச் சேர்ந்த செல்வம் என்பவரது விசைப்படையில் 10 பேருடன், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளார். 21 ஆம் தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரவேல் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் தனது சிகிச்சைக்காக அரசு கொடுத்த ரூ.2 லட்சத்தையும் முழுமையாக செல பெற்றுள்ளார்.
தற்போது வீடு திரும்பி உள்ள வீரவேல் படுகாயம் காரணமாக திரவ ஆகாரங்களை மட்டுமே உட்கொண்டு வருகிறார். மேலும் இவரால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாத வீரவேல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதுடன், தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழலிலும் உள்ளார். அரசு அறிவித்த எந்த உதவிகளும் கிடைக்கப் பெறாத நிலையில் நேற்று வீரவேல் தனது மனைவி மதுமதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டரை சந்தித்து உதவி கேட்க வந்திருந்தார். ஆனால் கலெக்டர் வராததால் வீரவேல் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏமாற்றமடைந்தனர்.
தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சீர்காழி யூனியன் சேர்மன் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோருடன் தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது கமல் ஜோதி தேவேந்திரன் தற்காலிக உதவிகளை தான் செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்தி உரிய உதவிகளை பெற்று தருவதாக எம்எல்ஏக்கள் உறுதி அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரவேல் மனைவி மதுமிதா, தனது கணவரின் மேல் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும். வீரவேல் இனி வேலைக்குச் செல்ல முடியாது என்பதால் கணவரையும் குழந்தைகளையும் காக்க தனக்கு அரசு வேலை தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதனால் தான், பல அரசு வேலைகள் தகுதி, திறமை உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை.(கடற்படைக்கு தெரியாதா சுடப்படும் இடங்களில் யார் இருப்பார்கள் என்று)