ADVERTISEMENT
இன்று பசி வந்தவுடன் பலர் உணவு டெலிவரி ஆப்களை தட்டி கன நேரத்தில் விரும்பிய உணவை டெலிவரி பெறுகின்றனர். நமக்கு அருகில் உள்ள உணவகங்களில் இருந்து தான் பெரும்பாலும் உணவு டெலிவெரி கிடைக்கும். ஆனால் 30,000 கிலோமீட்டர் தாண்டி சென்று ஒரு உணவை டெலிவரி செய்த பெண்மணியின் செயல் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இதுவே உலகின் மிக நீண்ட உணவு டெலிவரியாக கூறப்படுகிறது.
ஸ்விகி, சொமேட்டோ, போன்று சிங்கப்பூரில் ஃபுட் பாண்டா என்ற உணவு டெலிவரி ஆப் செயல்படுகிறது. சென்னையை சொந்த ஊராகக் கொண்ட மானசா கோபால் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவர் உலகின் பல பகுதிகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். அதன் ஒரு பகுதியாக இருண்ட கண்டம் எனப்படும் அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொள்ள நிதி திரட்டும் பணிகளில் இறங்கினார். அதற்கு ஸ்பான்சர் நிறுவனங்களை தேடிய போது, அவருக்கு புட் பாண்டா நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த டெலிவரி நிறுவனம், மானசாவின் அண்டார்டிகா கனவை நனவாக்க முன்வந்தது. ஒரு கண்டிஷனுடன். அது தான் உணவு டெலிவரி பணி. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தனது பிராண்டை குறைந்த செலவில் உலகம் முழுக்க பிரபலப்படுத்தியுள்ளது.
வழக்கம் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற பெயரில் இந்த நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூரிலிருந்து ஜெர்மனி ஹம்பர் நகரத்திற்குச் சென்று பின், அங்கிருந்து வேறு விமானத்தில் அர்ஜென்டினாவுக்கு சென்றார்; அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அண்டார்டிகாவிற்குச் சென்றார். இவ்வாறு மூன்று கண்டங்களைத் தாண்டி நான்காவதாக அண்டார்டிகாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் காய்கறிவகை உணவுகள், தேநீர், பிஸ்கட் பாக்கெட்டுகள், போன்ற அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்தார்.
இவர் உணவு டெலிவரி செய்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும். அது இணையதளங்களில் வைரலானது. சாகச பயணம் மேற்கொண்ட அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தனது அண்டார்டிகா பயணம் குறித்த வீடியோவில் கடுமையான பனிப்பொழிவு, சேரு நிறைந்த வழித்தடம் போன்ற கடினமான பாதைகளைக் கடந்து உணவினை சேர்த்ததை காட்டியுள்ளார்.
ஸ்விகி, சொமேட்டோ, போன்று சிங்கப்பூரில் ஃபுட் பாண்டா என்ற உணவு டெலிவரி ஆப் செயல்படுகிறது. சென்னையை சொந்த ஊராகக் கொண்ட மானசா கோபால் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவர் உலகின் பல பகுதிகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். அதன் ஒரு பகுதியாக இருண்ட கண்டம் எனப்படும் அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொள்ள நிதி திரட்டும் பணிகளில் இறங்கினார். அதற்கு ஸ்பான்சர் நிறுவனங்களை தேடிய போது, அவருக்கு புட் பாண்டா நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த டெலிவரி நிறுவனம், மானசாவின் அண்டார்டிகா கனவை நனவாக்க முன்வந்தது. ஒரு கண்டிஷனுடன். அது தான் உணவு டெலிவரி பணி. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தனது பிராண்டை குறைந்த செலவில் உலகம் முழுக்க பிரபலப்படுத்தியுள்ளது.
வழக்கம் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற பெயரில் இந்த நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூரிலிருந்து ஜெர்மனி ஹம்பர் நகரத்திற்குச் சென்று பின், அங்கிருந்து வேறு விமானத்தில் அர்ஜென்டினாவுக்கு சென்றார்; அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அண்டார்டிகாவிற்குச் சென்றார். இவ்வாறு மூன்று கண்டங்களைத் தாண்டி நான்காவதாக அண்டார்டிகாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் காய்கறிவகை உணவுகள், தேநீர், பிஸ்கட் பாக்கெட்டுகள், போன்ற அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்தார்.

வாசகர் கருத்து (4)
எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?
30,000 கி.மீ பயணம் 900 கி.மீ. மணிக்கு மிக மிக வேகம் கொண்ட விமானம் எனில் குறைந்தது 33 மணிநேர பயணம்??? பல விமானம் மாறியதால் குறைந்தது 5 நாட்கள் ஆகியிருக்கும்???அது வரை காய்கறியில் செய்த உணவு கெடவில்லை??? பிஸ்கட் பரவாயில்லை???
Let me contact Food Panda for the next Food Delivery......
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
முத்திப்போச்சு