Load Image
Advertisement

விமர்சனங்களை வரவேற்கிறேன்: ஸ்டாலின் பேச்சு

 விமர்சனங்களை வரவேற்கிறேன்: ஸ்டாலின் பேச்சு
ADVERTISEMENT
அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று(நவ.,29) அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியவதாவது: எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்களாக காணப்படும் மாவட்டம் அரியலூர். மேலும் அரியலூர் மாவட்டம் கனிம வளங்கள் நிறைந்தவை. தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றிய ராஜேந்திர சோழன்.

தமிழகத்தில் அகழ்வாராய்சி பணிக்காக இதுவரை இல்லாத அளவில் ரூ, 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர் மற்றும் பெரம்பலூரில் புதை படிவ பூங்காக்கள் அமைக்கப்படும். 15 மாதங்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போகவில்லை. ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது என்பதற்கும், முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கும் எடுத்து காட்டு தான் கடந்த கால ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்த போது கைகட்டி வேடிக்கை பார்த்தது. தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இப்போது இதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார் கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லை என வருத்தப்படுகிறார்கள். தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது. சிலர் ஆபத்து ஆபத்து என்று அலறி கொண்டுள்ளனர். இப்படி சொல்லும் சிலருக்கு இருக்கும் பதவி நிலைக்குமா? என்று பயமாக உள்ளது. அதனால், தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால், விமர்சிப்பவர்கள் அதற்கு அருகதையானவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (22)

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    விமர்சனங்களை வரவேற்கிறாராம். அதான் கழுவி கழுவி ஊத்துறாய்ங்கல்ல

  • sridhar - Chennai,இந்தியா

    அமைதி , மயான அமைதி . இது நல்லதில்லை .

  • Devan - Chennai,இந்தியா

    நீ அனுப்பும் மசோதாவை கேள்வி கேட்டு திருப்பி அனுப்பின கவர்னரை தலை இருக்காது கால், கை முறிந்து விடும் என்று பயம் காட்டினாலும் பயப்படாமல் இருக்கும் அவர் எங்கே ,விமர்சிப வர்களை கைது செய்யும் நீ எங்கே

  • vbs manian - hyderabad,இந்தியா

    உண்மை தமிழ் நாடு முழுதும் லஞ்ச பொக்கிஷம். மருத்துவ மனைகள் அரசு அலுவலகம் பத்திர பதிவு ஆபீஸ் சொல்லி கொண்டே போகலாம். அமைதி பூங்கா ஆச்சர்யம். குடித்து விட்டு பள்ளிக்கு வரும் மாணவர் பஸ்ஸில் குத்தாட்டம் போடும் மாணவிகள் ஆசிரியரோடு கை கலப்பு . லேட்டஸ்ட் குண்டு வெடிப்பு.

  • Gopinathan S - chennai,இந்தியா

    இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லு...இல்லைன்னா உங்கள் கலைஞர் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை நிறுத்துங்க....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement