திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வருகையை கண்காணிக்க ஒன்பது கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுதும், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு பக்கத்திலுள்ள திருமஞ்சன கோபுரத்தின் அருகிலுள்ள கட்டை கோபுரத்தில், கோவிலுக்குள் வரும் பக்தர்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதற்காக, சிற்பத்தின் முகத்தில், ஆணி வைத்து துளையிட்டு, அதை உடைத்து சேதப்படுத்தி, கேமரா பொருத்தப்பட்டது. மேலும், சிற்பத்தின் உடைந்த முக பாகம் அங்கேயே கிடக்கிறது. இதைக்கண்ட, விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள், சிற்பத்தை சேதப்படுத்தி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதை கண்டித்து குரல் எழுப்பினர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி, அதன் அருகில் கோபுரத்தில் துளையிட்டு பொருத்தியுள்ளது. விலை மதிக்க முடியாத கோபுரம் மற்றும் அதிலுள்ள உன்னத சிற்பங்களை சேதப்படுத்தியது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (34)
நாம் ஒவ்வொரு செய்தியாக கடந்து மறந்து போகிறோம் . இது தான் ஆட்சியாளர்களின் பலம் . ஒரே ஒரு சர்ச் அல்லது மசூதியின் ஒரே ஒரு செங்கல் நீக்கப்பட்டிருக்கிறதா இதுவரை . ஒற்றுமை அவர்களின் பலம் . அலட்சியம் நம் பலவீனம் .
கரப்ஷன் கமிஷன் என்று இருக்கும் அதிகாரிகள் கவனக்குறைவே இது..
காண்ட்ராக்ட் எடுத்த ...யாக இருக்கலாம்....
கேமராவை பொறுத்தியவன் என்ன மாதிரி ஹிந்து கடவுள்களை அசிங்க படுத்தும் மனநிலையில் இருந்திருப்பான். ஒருவேளை கிரிப்டோவை சேர்ந்தவனாக இருப்பான் போல. இந்த லட்சணத்தில் இந்த திருட்டு அறநிலை துறை சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கேள்வி கேட்கிறானுக வெட்கமே இல்லாமல். டெய்லி என்னதான் மீட்டிங் போடுவாங்களோ, நுங்கம்பாக்கம் அலுவலகம் உள்ளே வெளியே நூற்று கணக்கான ஜீப்கள் நிறுத்தி வைத்து, டிராபிக் ஜாம் செய்கிறார்கள். பக்தர்கள் உண்டியலில் போடும் காசில் மஞ்சள் குளிக்கிறார்கள். இவர்கள் பண்ணும் பாவம் இவர்கள் சந்ததியை நாசம் பண்ணும்.
திராவிட மாடல்......எதுவும் பேசக்கூடாது......