ஆசிரியைக்கு தொல்லை 4 மாணவர்கள் கைது
மீரட்:உத்தர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியைக்கு தொல்லை கொடுத்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் மீரட் அருகே ரத்னா இனாயத்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியை போலீசில் கொடுத்த புகார்:
கடந்த சில மாதங்களாக பிளஸ் 2 படிக்கும் நான்கு மாணவர்கள் என்னிடம் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். என்னைப் பற்றி அவதுாறாக பேசி 'வீடியோ' எடுத்து சமூக
வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், பள்ளிக்குள் நான் நுழையும் போது என்னைப் பார்த்து, 'ஐ லவ் யூ' என்று கூறி தொந்தரவு செய்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், நான்கு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு
செய்து சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!