ADVERTISEMENT
விரும்பப்படும் நாடு!
நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளிவிட்டு, உலகின் ஐந்தாவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. முதலீடுகள் மற்றும் வாய்ப்புகளுக்கு
உலக அளவில் விரும்பப்படும் நாடாக இந்தியா உள்ளது.ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி
வரம்பு மீறல்!
விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் வரம்பு மீறுகின்றனர். கைது செய்யும் நபர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் துன்புறுத்துகின்றனர். எந்த அரசும், நீதிமன்றமும் இந்த கொடுமைகளை
சகித்துக் கொள்ளாது.பூபேஷ் பாகேல்சத்தீஸ்கர் முதல்வர், காங்.,
அமேதியில் போட்டியா?
மீண்டும் அமேதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து எதுவும் தெரியாது. இப்போதைக்கு என் கவனம்
ஒற்றுமை யாத்திரையில் உள்ளது. அமேதியில் போட்டியிடுவேனா, மாட்டேனா என்ற கேள்விக்கு, ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் பதில் கிடைக்கும்.ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!