ADVERTISEMENT
மதுரை: பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று(நவ.,28) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு :
* பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது.
* மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது?.
மாணவர்களுக்கு 100 சதவீதம் மது விற்பனை செய்யப்படுவதில்லையா?

* பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசால் உறுதியாக சொல்ல முடியுமா?.
* 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (34)
மது விற்பனையில், குடிகாரர்களின் கருணையில்த்தான் நீதிபதிகளுக்குக்கூட சம்பளம் கிடைக்கிறது. அது இல்லை என்றால் தமிழக அரசு என்றோ திவாலாகியிருக்கும்... ஏனென்றால் திராவிடர்களின் ஆட்சி மற்றும் கோட்பாடுகள் அனைத்தும் பொது மக்களை கொள்ளையடிப்பதை குறியாகக்கொண்டவை.
விடியல் அரசின் சாதனை.
மதுவிலக்கு ஏன் அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்கப்படவில்லை?.
இப்படித்தான் ஆயிரக்ணக்கான கேள்விகளை போலீஸ் அர்டேர்லி வழக்கில் கேட்டார்கள்? தீர்ப்பு சொன்னபிறகும் அந்த முறை ஒழியவில்லை. அதைப்பற்றி நீதி மன்றமும் எந்த கவலையும் படவில்லை? முதலில் நீங்கள் உங்களை பார்த்து இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள். க்ரானைட் வழக்கில் சகாயம் சார் கொடுத்த அறிக்கை என்ன ஆனது?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
குடிச்சுட்டு விபத்து ஏற்படுத்தினாலோ, பொண்டாட்டி, புள்ளையை தாக்கினாலோ, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாலோ தூக்கு தண்டனைன்னு சட்டம் போட துப்பில்லை. நீதிமன்றம்னாலே அந்தக்கால சாவித்திரி, விஜயகுமாரி மாதிரி ஊளு ஊளுன்னு கண்ணீர் விட்டு வேதனை தெரிவிப்பது வழக்கமாயிடுச்சு.