நான் செல்வது சரியான திசை: காங்., எம்.பி ராகுல்
இந்தூர்: என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், நடத்த பா.ஜ., ஆயிரம் கோடி வரை செலவழித்துள்ளது. நான் சரியான திசையில் செல்கிறேன் என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து துவக்கியுள்ளார். இதுவரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்திய பகுதிகளை முடித்து கொண்டு மஹாராஷ்ரா மாநிலத்திற்கு சென்றார்.

அதன்பின்பு, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச எல்லைக்குள் வந்த அவர் தொடர்ந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். மத்திய பிரதேசத்தில், ராகுல் பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார். இந்நிலையில் காங்., எம்.பி ராகுல் இன்று இந்தூரில் காங்., தொண்டர்களுடன் யாத்திரையை மேற்கொண்டார்.
'' சைக்கிள் ஓட்டிய ராகுல்'':

இதற்கிடையே, ராகுல் நேற்றைய யாத்திரையில், புல்லெட் பைக்கை சாலை விதிகளை மதித்து, ஓட்டி மகிழ்ந்தார். ஆனால் இன்றைய யாத்திரையில் சைக்கிள் ஒன்றை ஓட்டி மகிழ்ந்தார். மேலும், யாத்திரையில் கலந்து கொண்ட, மக்களுடன் போட்டை எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அப்பகுதி துப்புரவு பணியாளர் பெண்ணுடன் காங்., எம்.பி ராகுல் எடுத்துக்கொண்ட போட்டோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பா.ஜ.க. எனது தோற்றத்தினை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது.
அவர்கள் என்னை பற்றிய ஒரு தோற்றம் உருவாக்கி வைத்துள்ளனர். அது தீங்கு தர கூடியது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது எனக்கு நன்மையே. ஏனெனில், என்னிடம் உண்மை உள்ளது.
என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், நடத்த பா.ஜ., ஆயிரம் கோடி வரை செலவழித்துள்ளது. நான் சரியான திசையில் செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளியின் கண்ணீர் தொலைக்காட்சியில் தெரியவில்லை:
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொலைக் காட்சிகளில் எந்த செய்திகளும் காட்டப்படுவது இல்லை. ஒரே ஒரு முகத்தை மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்.

விவசாயியின் தேய்ந்த கைகளோ, தொழிலாளியின் கண்ணீரோ தெரியவில்லை. பாஜகவின் 'நண்பர்களும்' ஊடகங்களுக்கு கடிவாளம் போட்டுள்ளனர் - உண்மையைச் சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
வாசகர் கருத்து (21)
அவர் கூறுவதில் விளக்கம் அதனால் தான் ஒரு ரப்பார் ஸ்டாம்ப் தேடி இப்போது கிடைத்து விட்ட குஷியில் அடுத்தது தான் செல்ல வேண்டிய திசை இத்தாலி அல்லது இங்கிலாந்து என்று கூற வருகிறார்.
ராகுல் M P மெம்பெர் ஆப் பாதயாத்திரியர்.
ராகுல் எம் பி ன்னு அவர் சொல்லித்தான் தெரியவேண்டிருக்கிறது. பாராளுமன்றதுக்கு போக சொன்னா பாதயாத்திரை போய்க்கொண்டுகிறார்.....
Sota beam 😝
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கரெக்டா சொல்ற. நீ சொல்வது கட்சியை முடிக்க வேண்டியதை நோக்கி தான்