ADVERTISEMENT
மதுரை -மதுரை ஆவின் வளாகத்திற்குள் தடையை மீறி தனியார் வாகனங்கள் வலம் வருவதாகவும், அவற்றில் நெய், பால் திருட்டு நடப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆவின் வளாகத்திற்குள் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் வேன், கார்கள், கட்சிக் கொடியுடனும் வந்த பல மணிநேரம் வளாகத்திற்குள் நிறுத்துகின்றனர். குறிப்பாக நெய் இருப்பு வைக்கப்படும் அறை அருகே தான் நிறுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் நெய் பாட்டில்கள், பால் பாக்கெட்டுகள் திருடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
ஊழியர்கள் கூறியதாவது: கட்சி கொடிகள் கட்டிய கார்கள் உள்ளே வரும்போது எவ்வித பதிவும் செய்வதில்லை. அதுபோல் ஆவின் வாகனங்கள் வெளியேறும்போது அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்படும். ஆனால் தனியார் வாகனங்கள் பின் பகுதியாக அனுப்பி விடுகின்றனர். இதை பயன்படுத்தி நெய், பால் பாக்கெட்டுகளை அவர்கள் அள்ளிச்செல்கின்றனர். இதனால் ஆவினுக்கு இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு பொது மேலாளர் சாந்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.
வாசகர் கருத்து (5)
இது நீண்ட நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என ஓரிரு வாரங்களுக்கு முன்பே நான் பதிவிட்டிருந்திருக்கிறேன் .
திருடப்படும் பால் / நெய் பொருட்கள் எல்லாம் கெட்டுவிட்டது என்று நஷ்ட கணக்கில் வரும், பின்பு விலை உயர்வு, ஆவின் பாலகம் தனியார் மயமாக்க இந்த செயல் எல்லாம் முன்னோடி....... வாழ்க மக்கள்
This may be done by Ruling Party people. g.s.rajan Chennai.
This people one day will come to our house and loot our belongings. Who cares, we need one quarter and 2000 rs and a packet of Nai briyani..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
If officers are also involved, how will they control this looting.