ADVERTISEMENT
'கமல் மாதிரி ஏன் பேசுறாரு?'
உள்ளாட்சிகளில், 'பேனர்' வைப்பதில் ஊழல் நடந்ததாக, தமிழக எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., வைச் சேர்ந்த பழனிசாமி குற்றம் சாட்டியதும், அதற்கு விளக்கம் அளிக்க, தலைமை செயலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'இதில், அரசு நேரடியாக சம்பந்தப் படவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் வழியே, உள்ளாட்சி நிர்வாகம் நடக்கிறது. அதற்கு, அவர்கள் தான் பொறுப்பு; துறை அமைச்சரோ, செயலரோ பொறுப்பாளிகள் அல்ல. அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களும் உள்ளாட்சி தலைவர்களாக உள்ளனர். அவர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் விபரம் கேட்டிருக்கலாம்' என்றார்.
உள்ளாட்சித்துறை என்ன, மத்திய அரசால் நிர்வகிக்கப் படுகிறதா? பட்டும் படாமல் 'மையமான' பதில்