‛‛ பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் ஆம் ஆத்மி: யோகி குற்றச்சாட்டு
ஆமதாபாத்: பா. ஜ., அரசு நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டது. டில்லியில் இருந்து வந்த ஆம் ஆத்மி கட்சி பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
![Latest Tamil News]()
குஜராத்தில் வரும் நவ.,1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதியத்நாத் கலந்து கொண்டு பேசியவதாவது: பா. ஜ., அரசு நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டது. டில்லியில் இருந்து வந்த ஆம் ஆத்மி கட்சி பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
அயோத்தியில் ராமர் கோவிலை எதிர்க்கும் அவர், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை ராணுவ வீரர்களிடம் கேட்கிறார். குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தொகுதி சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தாமரை மலரப் போகிறது. சோம்நாத்தின் புனித பூமியின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் தேசியவாதத்தின் பா. ஜ., முக்கிய பங்காற்றுகிறது. குஜராத்தின் சோம்நாத் விதான்சபா தொகுதியில் அபரிமிதமான மக்கள் நம்பிக்கையுடன் மலரப் போகிறது.
![Latest Tamil News]()
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் இந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டம், பாஜக அரசின் வளர்ச்சி, நல்லாட்சி கொள்கைகளில் விளைவாகும். இங்குள்ள ஒவ்வொரு வாக்காளரும் குஜராத்தில் தாமரைக்கு வெற்றிக்கு உறுதியாக உள்ளனர். குஜராத் சட்டசபை தேர்தலில், மக்கள் பாஜ., வுக்கு ஓட்டளித்து, இரட்டை எஞ்சின் பாஜக ஆட்சியை மாபெரும் பெரும்பான்மையுடன் அமைக்க உள்ளனர்.
பாஜ., ஆட்சி பிரதமர் மோடி வழிகாட்டுதல் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பாஜ., இந்தியாவின் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறது. சோமநாதர் கோவிலின் மறுமலர்ச்சியை காங்கிரஸ் விரும்பவில்லை. அம்பேத்கரையும் காங்கிரஸ் அவமதித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்து (11)
நாடெங்கிலும் அம்பேத்கார் சிலையை யார் உடைக்கின்றார்கள் என்பது மக்களுக்கு புரியும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அருள் முகலட்சணம் இல்லாத யோகி சாமியாரின் நிர்வாக லட்சணம் பற்றி எல்லாருக்கும் தெரியும்.