Load Image
Advertisement

மலைமண்டல பெருமாள் கோவில் இடம் கோவில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு

  மலைமண்டல பெருமாள் கோவில் இடம் கோவில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு
ADVERTISEMENT


சதுரங்கப்பட்டினம் : சதுரங்கப்பட்டினத்தில், இஸ்லாமிய வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ள, அறநிலையத்துறை கோவில் மண்டபத்தை மீட்க, நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறையின், மலைமண்டல பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு கிழக்கில், ஊஞ்சல், உறியடி மண்டபங்கள் உள்ளிட்டவற்றுடன், 1.20 ஏக்கர் பரப்பு வளாகம் உள்ளது.

மண்டபங்கள், விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஊஞ்சல் சேவை, உறியடி என, நீண்டகாலத்திற்கு முன் நடைபெற்றுள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இவ்வளாகம் பராமரிக்கப்படாமல், மண்டபங்கள் சீரழிந்து, முட்புதர் சூழ்ந்தது.

கோவிலின் தற்கால ஊழியர்கள், இத்தகைய இடம் இருப்பதையே அறியவும் இல்லை.

இச்சூழலில், கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாமியர், அவ்வப்போது, இவ்வளாகம் வந்து சென்றுள்ளனர்.

இப்பகுதியினர் புதரை அகற்றி. உள்ளே சென்று கவனித்தபோது, சீரழிவு மண்டபங்களை இஸ்லாமிய மத வழிபாட்டு இடமாக மாற்றியது தெரிந்தது.

இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, இவ்விடத்தை மீட்க, தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து, அறநிலையத் துறை புனரமைப்பு ஆலோசனை குழுவைச் சேர்ந்த, முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் ஸ்ரீதரன், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர்.

மண்டபங்களில், யோக நரசிம்மர் உள்ளிட்ட ஹிந்து மத வழிபாட்டு சிலைகள் மற்றும் விஜயநகர கால வடிவமைப்புடன் உள்ளதை கண்ட ஸ்ரீதரன், இதுகுறித்து அறிக்கை அளிப்பதாகவும், அதன் அடிப்படையில், கோட்டாட்சியரிடம் முறையிட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement