Load Image
Advertisement

தொடர்ந்து அதிகரித்து வரும் அன்னிய செலாவணி இருப்பு..

மும்பை,-நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு, தொடர்ந்து இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது.
Latest Tamil News

கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, 20 ஆயிரத்து 803 கோடி ரூபாய் அதிகரித்து 44.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்திலும் இருப்பு அதிகரித்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக உயர்வு காணப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், இதுவரை இல்லாத அளவுக்கு, 52.89 லட்சம் கோடி ரூபாயாக அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதன்பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டதை அடுத்து, அதை தடுக்கும் வகையில், அதிகளவில் டாலரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டது.
Latest Tamil News
இதையடுத்து, அன்னிய செலாவணி இருப்பும் குறையத் துவங்கியது.

இந்நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டு வாரங்களாக இருப்பு அதிகரித்து வருகிறது.

தங்கத்தின் இருப்பும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் இருப்பு 2,583 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 3.28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (5)

  • sankaseshan - mumbai,இந்தியா

    குறுக்கு vazhiyil sampathippathu Thavira unakku ennataa theriyum

  • அப்புசாமி -

    பிட்காயினை ஷார்ட் செய்து சூபரா சம்பாரிச்சாங்க என் நண்பர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்