ஸ்ட்ரீட் பைட்டர் லுக்கில் புதிய மின்சார பைக் அறிமுகம்
பெங்களூரு,-'அல்ட்ராவைலட் ஆட்டோமொடிவ்' என்ற புதிய நிறுவனம், 'எப் 77' எனும் மின்சார பைக்கை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக், 'ஒரிஜினல், ரீகான், சிறப்பு எடிஷன்' என மூன்று வகைகளில் வருகிறது. இவற்றில், சிறப்பு எடிஷன் வகையில், மொத்தமே 77 பைக்குகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளது.
பைக்கின் வகையைப் பொறுத்து, வேகம், ரேஞ்ச், பேட்டரி மற்றும் எடை மாறுபடும். மற்றபடி, மூன்று மின்சார பைக்குகளுமே, ஒரே வடிவில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 'கிளைடு, காம்பாட், பலிஸ்டிக்' என, மூன்று 'டிரைவ் மோடு'கள் உள்ளன.
அதிலும், அதிக வேகம் செல்லும், பலிஸ்டிக் மோடை, 70 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

கூடுதலாக, 5 அங்குல டி.எப்.டி., டிஸ்பிளே, ஸ்மார்ட் போன் இணைப்பு, நேவிகேஷன், பேட்டரி விபரங்கள், விபத்து கண்டறிதல் வசதி, டுயல் சானல் ஏ.பி.எஸ்., என பல அம்சங்களும் இந்த பைக்கில் இருக்கின்றன.
இந்த 'எப் 77' பைக்கின் விலை, அதன் வகையை பொறுத்து, 3.80 லட்சம் முதல், 5.5 லட்சம் ரூபாய் வரை மாறுபடுகிறது.
பைக் வகை ஒரிஜினல் ரீகான் சிறப்பு எடிஷன்
பேட்டரி 7.1 கி.வாட் 10.3 கி.வாட் 10.3 கி.வாட்ரேஞ்ச் 207 கி.மீ., 307 கி.மீ., 307 கி.மீ.,ஹார்ஸ் பவர் 37 பி.எஸ்., 39 பி.எஸ்., 41 பி.எஸ்.,டார்க் 85 என்.எம்., 95 என்.எம்., 100 என்.எம்.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!