ADVERTISEMENT
மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகால் புதுப்பிக்கப்பட்டாலும் மன்னரை பற்றிய 50 நிமிட ஒலி ஒளி காட்சி அரதப்பழசாக உள்ளதால் வெளிநாட்டு பயணிகள், காட்சி துவங்கிய சில நிமிடங்களிலேயே ‛ரொம்ப போரிங் ஷோ' என்று வெளியேறுகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டு முழுவதும் மாலை 6:45 மணிக்கு ஆங்கிலத்திலும் இரவு 8:00 மணிக்கு தமிழிலும் நடத்தப்படும் இந்த ேஷாவில் பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன் செய்த தொழில்நுட்பத்தை தற்போது வரை மாற்றவில்லை. கலர் லைட்டுக்கு பதிலாக கலர் பேப்பர் வைத்து காட்சிப்படுத்துகின்றனர்.
வெளிநாட்டு பயணிகள் பணம் கொடுத்து உள்ளே வந்த சில நிமிடங்களிலேயே ‛ரொம்ப போரிங் ேஷா' என பாதியில் வெளியேறுகின்றனர். ஸ்கிரிப்ட்டை கொஞ்சம் மாற்றி மைசூரு அரண்மனை, திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்கில் உள்ளதை போன்ற லேசர் லைட் ேஷா, நவீன டிஜிட்டல் ஆடியோவுடன் அமைக்க வேண்டும்.
புத்துயிர் பெறுமா புதுமண்டபம்
மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தில் பல ஆண்டுகளாக அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் கலைநயத்திற்கான எடுத்துக்காட்டாக உள்ளதால் ‛ஆர்ட் காலரி', மீனாட்சி கோயில் பற்றிய லேசர் ஒலி ஒளி காட்சி அமைக்கலாம். சிற்பங்களையும் ஓவியங்களையும் வெளிநாட்டு பயணிகள் விரும்பி ரசிப்பர். எழுகடல் தெரு, நந்தி சிலை பின்பக்க சுவரையொட்டி மின்விளக்குகள் அமைத்தால் மீனாட்சி கோயில் பள்ளியறை பூஜை முடிந்து வெளிவரும் பயணிகளுக்கு புதுமையாக இருக்கும். சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!