பா.ஜ.,வுக்கு எதிராக கமல் களமிறக்க தி.மு.க., திட்டம்
சென்னை--வரும் லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, பா.ஜ., போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையில் களமிறக்க, தி.மு.க., திட்டமிட்டு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கமல் கட்சி, 2.62 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், பா.ஜ., வேட்பாளர் வானதியிடம் தோல்வி அடைந்தார்.
போட்டியிட்ட இரு தேர்தல்களிலும் தனித்து 3 சதவீதத்தை கூட தாண்ட முடியாததால், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைய, கமல் திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதனால்தான், 2021 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,வுடன் கமல் நெருக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கூட்டணியில் இணைந்தால் கமலுக்கு, தென் சென்னை அல்லது கோவை தொகுதியை வழங்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமலை நிறுத்தினால், இந்த இரு தொகுதிகளிலும் பா.ஜ.,வை வீழ்த்தலாம் என, தி.மு.க., கருதுவதாக தெரிகிறது.
கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளது. தென் சென்னையில் போட்டியிட பா.ஜ.,வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
மீண்டும் அரசியலுக்கு திரும்ப விரும்பும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தென் சென்னையில் போட்டியிடும் விருப்பத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் கோவையில் தோற்றதால், லோக்சபா தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட விரும்புவதாக, முதல்வர் ஸ்டாலினிடம் கமல் கூறியிருப்பதாக, ஆளுங் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2018 பிப்ரவரியில், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை, நடிகர் கமல் துவங்கினார். 2019 லோக்சபா தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், 2.64 சதவீத ஓட்டுகளை பெற்றது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கமல் கட்சி, 2.62 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், பா.ஜ., வேட்பாளர் வானதியிடம் தோல்வி அடைந்தார்.

போட்டியிட்ட இரு தேர்தல்களிலும் தனித்து 3 சதவீதத்தை கூட தாண்ட முடியாததால், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைய, கமல் திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதனால்தான், 2021 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,வுடன் கமல் நெருக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கூட்டணியில் இணைந்தால் கமலுக்கு, தென் சென்னை அல்லது கோவை தொகுதியை வழங்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமலை நிறுத்தினால், இந்த இரு தொகுதிகளிலும் பா.ஜ.,வை வீழ்த்தலாம் என, தி.மு.க., கருதுவதாக தெரிகிறது.
கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளது. தென் சென்னையில் போட்டியிட பா.ஜ.,வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
மீண்டும் அரசியலுக்கு திரும்ப விரும்பும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தென் சென்னையில் போட்டியிடும் விருப்பத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் கோவையில் தோற்றதால், லோக்சபா தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட விரும்புவதாக, முதல்வர் ஸ்டாலினிடம் கமல் கூறியிருப்பதாக, ஆளுங் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (54)
நல்ல முடிவு, உடனடியாக அமுல்பாடுத்துங்கள். ஏற்கனவே திமுக வுக்கு பெண்கள் ஓட்டு போடுவது குறைவு, அண்ணனை அழைத்தால் ரொம்ப நல்லது.
திருட்டு கூட்டத்தோடு சேர்ந்தால் அழிவு நிச்சையம்.. யோசித்து முடிவெடு... இனி திராவிடக்கூட்டம் .... வாய்ப்பில்லை ராஜா...
இவ்வளவு பயமா பிஜேபிக்கு.....
' தெற்கிற்கு " ஏகப்பட்ட கிராக்கி உள்ளது போலும் தென் சென்னைத் தொகுதியில்தான் மேனாள் பாராளு மன்ற உறுப்பினர் ஜனா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். கமல் அய்யர் போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்கும் அவர் வேறு அவதாரம் எடுத்தாலும் எடுப்பார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பாஜகவுக்கு சரிசமமான கட்சி கமலின் மக்கள் நீதி மய்யம் தான்!