ADVERTISEMENT
கூடலுார்---முதுமலையில், 191 இடங்களில் மொத்தம், 382 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, புலிகள் உட்பட வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் துவங்கி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி வனச்சரகங்களில், தானியங்கி கேமராக்கள் வாயிலாக கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.
இதற்காக, 191 இடங்களில் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
முதுமலையில், மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிக்காக, 2 ச.கி.மீ., பரப்பளவுக்கு ஒரு இடம் வீதம், 191 இடங்களில், தலா இரண்டு வீதம், 382 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
முதல் ஐந்து நாட்கள் கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.
தொடர்ந்து, கேமராக்களில் பதிவாகும் படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து, ஆய்வு செய்யப்படும். இப்பணி, 40 நாட்கள் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக முதுமலை வெளிவட்ட பகுதியில், கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!