Load Image
Advertisement

வெள்ளிக்குறிச்சியில் போர் வீரன் நடுகல் சிற்பம்

Tamil News
ADVERTISEMENT


மானாமதுரை,--மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில்நாயக்கர் கால வீரனின் நடுகல் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவ்வூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தகவலின் படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளம் சிவக்குமார் கள ஆய்வு செய்தபோது அந்த சிற்பம் 400 ஆண்டு பழமையான நாயக்கர் கால போர் வீரனின் நடுகல் சிற்பம் என்று தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், பொதுவாக முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆட்சி பகுதியில் வீரதீர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நடுகல் எடுப்பது பின்பற்றப்படும் ஒரு மரபாகும். தற்போது கண்டறிந்த சிற்பமும் அந்த வகையில் வந்தவையே.

இந்த சிற்பமானது ஜெய புஷ்பவன நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் 2 அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தை பார்க்கும் போது வெள்ளிக்குறிச்சியில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் போர் வீரர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் இப்பகுதியில் முறையான ஆய்வை மேற்கொண்டால் இவ்வூரின் பழமையான வரலாற்றை வெளிக்கொண்டு வரலாம் என்றும் கூறினர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement