Load Image
Advertisement

டவுட் தனபாலு

  டவுட் தனபாலு
ADVERTISEMENT
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பா.ஜ., கொள்கை வேறு; எங்கள் கொள்கை வேறு. பா.ஜ., தேசிய கட்சி, தோழமை கட்சி என்ற அடிப்படையில், எங்கள் அணுகுமுறை இருக்கும். அ.தி.மு.க., தலைமையில் தான், தமிழகத்தில் கூட்டணி அமையும். அந்தக் கூட்டணியில் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எந்த நிலையிலும் இடமில்லை.

டவுட் தனபாலு: இப்படியே வீம்பு பிடிச்சிக்கிட்டு இருந்தால், பன்னீர், சசிகலா, தினகரன் அணியினருடன் பா.ஜ., கூட்டணி அமைத்து, உங்களை கழற்றி விட்டுட்டா என்னாகும்...? ஒரு பக்கம், மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வுக்கும்; மறுபக்கம் மத்தியில ஆளும் பா.ஜ.,வுக்கும் நடுவுல, உங்களால தாக்கு பிடிச்சு நிற்க முடியுமா என்ற, 'டவுட்' எழுதே!

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம்: 'பொது சிவில் சட்டம், கூடிய விரைவில் அமல்படுத்தப்படும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்; இதை சிலர் எதிர்க்கின்றனர். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்ற அடிப்படையில், அனைத்து தரப்பு மக்களுக்கும், ஒரே நீதி வழங்க வேண்டும் என்றால், சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, பொது சிவில் சட்டத்தை பா.ஜ., கொண்டு வருகிறது. இந்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

டவுட் தனபாலு:
ஜனநாயக நாட்டில், எல்லா குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது... 'பொது சிவில் சட்டம், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரானது' என, அந்த பிரிவினரை விட, அவங்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துவோர் தான் எதிர்க்கின்றனர் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ.,வை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில், சமூக விரோத கும்பல்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. அவர்களுக்கு காங்கிரசும் ஆதரவு அளித்தது. ஆனால், 2002ல் வன்முறை கும்பலுக்கு பாடம் புகட்டப்பட்ட பின், குஜராத்தில் அமைதி நிலவுகிறது.

டவுட் தனபாலு:
நீங்க அரசியலுக்காக சற்று மிகைப்படுத்தி கூறலாம்... ஆனாலும், 25 ஆண்டு களாக குஜராத்துல பா.ஜ.,வின் ஆட்சியை மக்கள் நீடிக்க செய்துட்டு இருப்பதே, இதற்கு சாட்சி என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!




அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: எங்களை கட்டுப்படுத்தவோ, ஆலோசனை வழங்கவோ, உச்சபட்ச தலைமையான கட்சியின் பொதுக்குழு இருக்கிறது. எங்கள் கட்சியின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி என்ன சொல்கிறாரோ, அதைத்தான் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வர்.

டவுட் தனபாலு: உங்க கட்சியின் பொதுக்குழு மேடையிலேயே, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியுடன் முறைச்சுக்கிட்ட ஆளாச்சே நீங்க... கட்சியையும், கட்சியினரையும் கட்டுக் கோப்பாக வச்சிருக்கும் ராஜதந்திரம், ஜெயலலிதா தவிர வேற யாருக்கும் வராதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!

பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி: மதுரை தி.மு.க., தற்போது ஒருங்கிணைந்த மாவட்டமாக உருவாகி, மூன்று மாவட்ட செயலர்களும் ஒன்றிணைந்து உள்ளோம். இனி, இங்கு யாரும் ஆட்டவும் முடியாது; அசைக்கவும் முடியாது. எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

டவுட் தனபாலு:
எல்லா கட்சி மேடைகள்லயும், எதிர்க்கட்சியினருக்கு தான் சவால் விடுவாங்க, பார்த்திருக்கோம்... ஆனா, சொந்த கட்சியைச் சேர்ந்த நிதி அமைச்சர் தியாகராஜனுக்கு சவால் விடுறதுக்காக, மூணு மாவட்ட செயலர்கள் கூடி கூட்டம் போட்ட கட்சி, தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும் என்பதில், 'டவுட்' இல்லை!


மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மணிமாறன்: ஒற்றுமையே பலமாகும். ஒரு கை ஓசை எடுபடாது. மதுரை தி.மு.க.,வில், மூன்று மாவட்ட செயலர்களும் சேர, சோழ, பாண்டியர் போல செயல்படுவோம். வரும் லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும்.

டவுட் தனபாலு: தி.மு.க., மாவட்ட செயலர்களும், மந்திரிகளும், எப்பவுமே குறுநில மன்னர்கள் போல தான் வலம் வருவாங்க என்ற குற்றச்சாட்டு இருக்குது... அது உண்மை தான் என்பதை, 'டவுட்'டே இல்லாம, பொது மேடையில போட்டு உடைச்சுட்டீங்களே!


வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தலைக்கு நேரடியாக நிதி அமைச்சரைப் பகைத்துக்கொள்ள முடியாத நிலையில், இப்படி சில்லறைக்குழுக்கள் தீர்மானம், அறிக்கை என்று அலட்டிக்கொள்ள விட்டிருக்கிறார் போலும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement