Load Image
Advertisement

தொழிலை விரிவுப்படுத்துவதற்காக ஹிந்தி கற்கும் தமிழக கோடீஸ்வரர்!

Tamil News
ADVERTISEMENT
இந்தியாவின் டாப் 50 கோடீஸ்வரர்களில் ஒருவர் ஸ்ரீதர் வேம்பு. தொழில்நுட்ப நிறுவனமான சோஹோவைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி. இவர் தனது தொழிலை விரிவுப்படுத்தினால், மத்திய மற்றும் கிழக்கு உ.பி.,யில் உள்ள நகரங்களுக்கு செல்வேன் என்றும், அதற்காக ஹிந்தி பயின்று வருவதாகவும் கூறியுள்ளார்.

தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட ஸ்ரீதர் வேம்பு, மெட்ராஸ் ஐஐடியில் இளநிலை பொறியியலும், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். கலிபோர்னியாவிலேயே ஒயர்லெஸ் பொறியாளராக பணியைத் தொடங்கிய இவர், 1996ல் தனது சகோதரர்களுடன் இணைந்து நெட்வொர்க் சாதனங்கள் வழங்குபவர்களுக்காக அமெரிக்காவிலேயே மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 2009ல் இது சோஹோ என பெயர் மாற்றம் கண்டது. சாஸ் (SaaS) மென்பொருள் சேவையினை தற்போது வழங்கி வருகிறது.

சர்வதேச மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் பெருநகரங்களில் மட்டுமே தங்கள் கிளைகளை தொடங்கி வந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு புது முயற்சியாக தென்காசி அருகே ஒரு குக்கிராமத்தில் சோஹோவின் கிளையை தொடங்கி அப்பகுதி இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வழங்கினார். மேலும் பட்டதாரிகளாக இல்லாதவர்களுக்கும் பயிற்சி வழங்கி அவர்களை மென்பொருள் துறைக்கு அழைத்து வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
Latest Tamil News இந்நிலையில் இளம் தொழில்முனைவோராக ஆக விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு தகவலை இவர் டிவிட்டர் வாயிலாக பகிர்ந்துள்ளார். அதில் “நான் கிளை தொடங்கினால், மத்திய மற்றும் கிழக்கு உ.பி.,யில் உள்ள நகரங்களுக்கும், பீகாருக்கும் செல்வேன். அங்கு பல கோடி இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனர். தற்போது சட்டம், ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது. நான் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தி கற்கிறேன்.” என கூறியுள்ளார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (16)

 • அருண், சென்னை -

  DMKவும் அதன் சொம்புகளும் என்னதான் கதரிநாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை... இன்னும் கொஞ்சநாள் ... அப்புறம் பாருங்க வடகன்ஸ் நல்லா தமிழ் பயின்று தமிழ்நாட்டில் எல்லா வேலைகளையும் தமிழனிடமிருந்து பிடுங்கிடுவான்.. ஏன்? மோடிஜி எல்லா மாநிலங்களிலும் தமிழ் மொழி கற்றுகனும்ன்னு சொல்லி இருக்கிறார், ஒரு சில மாநிலங்களில் இப்போவே பள்ளிகளில் தமிழ் மொழி கற்க ஆரம்பித்துவிட்டார்கள்... ஹிந்தி தெரியாதுபோடா-ன்னு சொல்லிக்கிட்டு இருங்க (ஹிந்தி எதிர்ப்பாளர்கள்), "உனக்குத்தான் ஹிந்தி தெரியாது, ஆனால் எனக்குதான் தமிழ் தெரியுமேன்னு" வடகன்ஸ் வந்திருவான் எல்லா வேலைகளிலும் ஆக்ரமிச்சுடுவான்... இப்போவே கூலித்தொழிலாளிகளின் வேலை போய்விட்டது....கூலி வேலைக்கு வடகன்ஸை இப்போதும் அமர்த்துவது தமிழன்தான்... மோடிஜி கூலித்தொழிலர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். திமூகாவை நம்பியவன் பாடு அதோகதிதான்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  அட போய்யா, ஸ்டாலின் குடும்பம், "ஹிந்தி தெரியாது போடா" அப்படின்னு ஊருக்கு உபதேசம் செய்து விட்டு, ஹிந்தி திரைப்படங்களை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள். இவர் என்னமோ ஹிந்தி படிக்கிறாராம்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  ஏற்கனவே நாங்க மற்றவர்களை இந்தி கற்க கூடாது என்று தடுத்து வருகிறோம் இந்த நிலையில் இவர் இந்தி கற்கிறேன் என்கிறாரே , எடுத்து போடு சரவெடியை

 • Raj - Chennai,இந்தியா

  ஹிந்தியை கற்பதினால் ஒன்றும் தவறில்லை, ஆனால் தாய் மொழியையும், தமிழ் மாநிலத்தையும் மறக்காமல் இருந்தால் சரி. தமிழன்டா எந்த மாநிலதாரையும் வாழ வைப்பான்.

 • Ashok.k - Madurai,இந்தியா

  Aasamshekal( malayalam) .... Wn EAST INDIA COMPANY After implement Their INCORPORATE BUSSINESS they LEARND TAMIL &.HINDI & OTHRR INDIAN LANGUAGES also someof our FAITHFUL SERVENTS to EAST INDIA COMPANY learnd ENGLISH LANGUAGES only bcoz of STRENGTHEN THE INCORPORATE BUSSINESS & RELATIONSHIPS gather & share KNOWLEDGES anyhow PASSION on any LANGUAGES ESSENTIAL to COLLECT THE PEOPLES CULTURE & NATIVE ANATOMY & easy to ESTABLISH BUSSINESS SUCESSFULLY....its (LANGUAGES)makes ATTACHMENT and easy to impress....We can see lot of JAPAN & BRITAIN & CHINEESH already came here and LEARND TAMIL LITERATURE ....Y ? just think.....French Peoples came and settled in PONDICHERRY also llearned Tamil Language....y ? Just think.....maybe The first indian incorporate VOC bought His Costal trading Ships thro this FRENCH PEOPLES....Y ? JustBcoz of ? I dont know who behind ZOHO ? But VALTHUKKAL to More secure jobs & elaborate to ur BUSSINESS AREAS without SPOILD NATURAL RESOURCES..........

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement