ADVERTISEMENT
சென்னை: 'இஸ்ரோ' நிறுவனம், புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட் உதவியுடன், இன்று(நவ.,26) காலை விண்ணில் செலுத்தியது.
'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது. அவற்றை, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இது தவிர, வணிக ரீதியில் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட், இன்று காலை 11:56 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் வாயிலாக, இ.ஓ.எஸ்., - 6, ஐ.என்.எஸ் - 2பி, 'ஆனந்த், தைபோல்ட், அஸ்ட்ரோகாஸ்ட்' என்ற பெயரில், ஒன்பது செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அவற்றில் ஐந்து, இந்தியாவைச் சேர்ந்தது; மீதி நான்கு, அமெரிக்காவைச் சேர்ந்தது. இந்தியா இரண்டு செயற்கைக் கோள்களை, பூடான் நாட்டிற்காக செலுத்தியது. முக்கியமான செயற்கைக்கோளான இந்தியாவின் இ.ஓ.எஸ்., - 6, மூன்றாம் தலைமுறைக்கான புவியை கண்காணிக்கும் திறன் உடையது.
இது, கடல் மேற்பரப்பில் நிலவும் மாற்றம், கடலின் வெப்ப நிலை உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக புகைப்படம் எடுத்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். மீதி எட்டு செயற்கைக்கோள்கள், 'நானோ' எனப்படும் சிறிய வகையைச் சேர்ந்தவை.

வாசகர் கருத்து (2)
இஸ்ரோவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. சந்திரயாண்3, ஆதித்யா, ககன்யான் முயற்சிகளும் வெற்றி அடையட்டும். இஸ்ரோ இந்தியாயாவின் பெருமை மற்றும் வெற்றி சின்னம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
காங்கிரதுலேஷன்ஸ் டீம் இந்தியா