புதுடில்லி :'' அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அரசியல்சாசன தின விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்று.கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு , அரசியல்சாசனத்தையும் குடிமக்களின் உரிமையையும் கொண்டாடிய போது, மனித குலத்தின் எதிரிகள் இந்தியாவின் மீது பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளரும் போது, அதிவேகமாக பொருளாதாரமாக இந்தியா உள்ள நிலையில், ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றன.

இந்தியா முன்பு புதிய வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பதவியில் இந்தியா அமர உள்ளது. நாம் அனைவரும் இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் முன் உயர்த்தி, பங்களிப்பை கொண்டு வர வேண்டும்.
அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள 'நாங்கள் மக்கள் என்பது, இந்தியாவை ஜனநாயகத்தின் தாயாக மாற்றிய உறுதிமொழி மற்றும் நம்பிக்கையாக உள்ளது. சரியான நேரத்தில் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக துவங்கப்பட்டுள்ள மின்னணு முயற்சிகள் போன்ற பல நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொண்டு வருகிறது.
ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள், நாட்டின் ஏழைகள் மற்றும் பெண்களை கைதூக்கிவிடுவதற்கு உதவுகிறது. சாமானிய மக்களுக்காக சட்டங்கள் எளிமைபடுத்தப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (13)
இந்தியாவில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கும் அம்பானி அதானி எல்லாம் கஞ்சி குடிப்பாங்களோ???ஒரு வேளை அதனால அவங்க ஏழைங்க லிஸ்ட்ல இருக்காங்க போல அவங்களும் இன்னும் மேலும் மேலும் முன்னேறணும். ஜி.எஸ்.ராஜன் சென்னை
இந்தியாவில் இருப்பது மாதிரி முன்னேற சாத்தியக்கூறுகள் இருந்தால் உலகில் உள்ள மற்ற நாடுகளிலும் ஏழைகளே முற்றிலும் இருக்கமாட்டார்கள் ,மோடிஜியின் சூத்திரத்தை அவர்களும் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் அவர்கள் முன்னேறுகின்றனர்... அதானி,அம்பானியை இன்னும் ஏழைனே நெனச்சுட்டிருக்கீங்கல்ல ??? சரி சரி,அது அப்படியே இருக்கட்டும்.... நம்ம பணக்காரங்கல்ல? அவங்க சோத்துக்கு இல்லாம செத்துக்கிட்டு இருக்காங்களாம்..., ஒருநேரத்துக்குக்கூட உணவுகிடைக்காத பணக்காரர்கள் கடந்த வருடங்களைவிட அதிகமாகி இருக்காங்களாம்... சே.. இந்த பணக்காரங்களுக்குவந்த சோதனை.., பேசாம ஏழையா பொறந்திருக்கலாம்..,அதுவும் குஜராத்துல பொறந்திருக்கலாம்...
தெருவில் பிச்சை எடுப்பவர்கள் குறையவில்லை . பட்டினியால் வாடுபவர்கள் குறையவில்லை . அதிகரித்துள்ளது
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
பாஜகவிடம் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் ஏதாவது உள்ளதா? கடந்த எட்டு வருடங்களில் ஏழைகளுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறீர்களா ?