Load Image
Advertisement

எம்.ஜி.ஆரை சீண்டுவதா? தி.மு.க.,வுக்கு கண்டனம்!

பா.ஜ.,வின் சமீபத்திய சர்ச்சையோடு, எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு, தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் செய்த பிரசாரம், சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Latest Tamil News

தமிழக பா.ஜ.,வில் சூர்யா - டெய்சி இடையேயான மோதல், பல விமர்சனங்களை எழுப்பியது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும், 'அக்கா - தம்பி' என கூறி, பொது வெளியில் சமரசம் ஆகினர்.

இந்நிலையில், தி.மு.க.,வின் ஐ.டி., அணி சார்பில், சூர்யா - டெய்சி விவகாரத்தோடு, எம்.ஜி.ஆர்., நடித்த படக் காட்சிகளை ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்., படங்களில், கனவு பாடல் காட்சிகளில், நடிகையருடன் காதல் செய்வார்; பின், தங்கச்சி - அண்ணா என, இருவரும் அழைத்துக் கொள்ளும் காட்சி வரும். அதேபோல், தமிழக பா.ஜ.,வில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக, தி.மு.க.,வினர் விமர்சித்துள்ளனர்.
Latest Tamil News

இதற்கு, எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ., நிர்வாகி வினோஜ் பி.செல்வம், 'எம்.ஜி.ஆரை இதை விட வேறு யாரும் அசிங்கப்படுத்த முடியாது. 'திராவிட மாடல்' வளர்ப்பின் மட்டரகமான ரசனை இது' என, கண்டித்துள்ளார்.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (25)

  • venugopal s -

    எது எப்படியோ, பாஜகவை நாறடித்த பெருமை இவர்கள் இருவருக்குமே உண்டு. வாழ்த்துக்கள்!

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    நடந்த அசிங்கத்தை,திசை திருப்புறங்களாம்... இங்க ஒருத்தனாவது, சூர்யா செய்ததபத்தி பேசியிருக்கான பாருங்க மக்களே... இவனுங்களைவிட கேவலமானவனுங்க இல்ல,இவனுங்க திமுகவை கேவலமானாவதுண்ணுறாங்க.....

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    தில்லுமுல்லு மாடலின் இருக்கும் உறவுகள் போல திமுகவினர் மற்றவரையும் நினைக்கின்றனர்

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    திமுக MP விமானநிலையத்தில் பெண்ணிடம் அடி வாங்கினாராமே

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஆட்சியும்தள்ளாடுது . கட்சியும் தள்ளாடுது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement