Load Image
Advertisement

நடிகையரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: தி.மு.க., பேச்சாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: நடிகையரிடம் மன்னிப்பு கேட்டு, 'இனி பெண்கள் குறித்து அவதுாறாக பேசமாட்டேன்' என, பிரமாண மனு தாக்கல் செய்ய, தி.மு.க., பேச்சாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் பேசினார். அப்போது, குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகிய நடிகையர் குறித்து, அவதுாறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், சைதை சாதிக் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சைதை சாதிக் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கவுதம் மாரியப்பன் ஆஜரானார்.

Latest Tamil News
இரு தரப்பு வாதகங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெண்களை பற்றி அவதுாறான கருத்துகளை மனுதாரர் பேசி உள்ளார். இனிமேல், இதுபோல பேச மாட்டேன் என, அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதில், சம்பந்தப்பட்ட நடிகையரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விசாரணை வரும், 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை, போலீசார் சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (26)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    விமர்சித்தவர் கைது செய்த காவல்துறை ஏன் கைது செய்யவில்லை. நீதிபதி கேட்கவில்லை

  • பேசும் தமிழன் -

    நாளை திமுக தலைவர் குடும்பத்தை பற்றி தவறாக பேசி விட்டு....பிறகு மன்னிப்பு கேட்டு விட்டால் போதும் ......அவர்களை கைது செய்ய கூடாது ....அது தானே உங்கள் தீர்ப்பு ???

  • kovai ram - BANGALORE,இந்தியா

    எந்த வழக்கும் இல்ல..

  • ராமகிருஷ்ணன் -

    திமுக ஆட்சியில் இருந்தால் நீதி அவர்களுடைய வசதிக்கு வளைக்கப்படும். மற்ற கட்சிகாரர்கள் திமுக கட்சி பெண்களை பேசினால் பெரிய போலீஸ் படையுடன் சென்று பயமுறுத்தி உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து கொடுமை செய்வார்கள். விசாரணை மிகவும் தாமதமாக நடக்கும். விடியல் அரசின் சட்ட திட்டங்கள் அப்படி உள்ளது.

  • Anand - chennai,இந்தியா

    இவனுங்களை ஜெயிலில் தான் அடைக்கவேண்டும் அல்லது சுட்டுக்கொல்லவேண்டும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்